• May 20, 2024

கோவில்பட்டியில் முடி திருத்தும் கட்டணத்தை  உயர்த்த முடிவு

 கோவில்பட்டியில் முடி திருத்தும் கட்டணத்தை  உயர்த்த முடிவு

கோவில்பட்டி மருத்துவர் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்க கூட்டம் வ. உ. சி. நகர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் குருசாமி வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் இசக்கி முத்து, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், நகர செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர்கள் பூமிநாதன், எம். மாரிமுத்து, துணை தலைவர் பி. முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

*நமது சங்க பொது இடத்தை மாற்று சங்கத்துக்கு வழங்ககூடாது.

*நமது மருத்துவ சமுதாய சங்கத்திற்கு உட்பட்ட சட்ட ஆலோசகராக கோவில்பட்டி வக்கீல் ரெங்கராஜனை நியமித்து ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

*நமது சங்க ,’’உறுப்பினர்களில் ஒருவரைத்தான் சங்க தலைவராக நிர்வாகிகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்,.

*கோவில்பட்டி மருத்துவ சமுதாய தொழிலாளர்களுக்காக புதிதாக அறக்கட்டளை நிறுவ முடிவேடுக்க்பப்ட்டு அதன்படி கோவில்பட்டி மருத்துவ சமுதா தொழிலாளர் அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டது.

*சங்க உறுப்பினர்களின் மாதாந்திர சங்க தொகையானது ரூ. 30 லிருந்து  ரூ.50 ஆக உயர்த்துவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

**கிடு கிடு என்று உயர்ந்து வரும் விலைவாசி உயர்வையொட்டி முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்துவது என்று ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது. \

கூட்ட முடிவில் சங்க பொருளாளர் கருமாரி ஈஸ்வரன் நன்றி கூறினார்.

=

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *