• May 20, 2024

கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் எதிரே நான்குவழி சாலையில் பஸ்சில் இருந்து இறங்கிய சிப்காட் பெண் அலுவலர் கார் மோதி உயிரிழந்த பரிதாபம்

 கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் எதிரே நான்குவழி சாலையில் பஸ்சில் இருந்து இறங்கிய சிப்காட் பெண் அலுவலர் கார் மோதி உயிரிழந்த பரிதாபம்

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திற்கு வரமால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி செல்வதால் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு காயங்களும், உயிரிழப்புகளும் தொடர்ந்து வண்ணம் உள்ளது…

சிலரின் சுய லாபத்திற்காக பாதுகாப்பு இல்லாத இடத்தில் கூடுதல் பஸ் நிலையத்தினை அமைத்தது மட்டுமின்றி,, அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி வரும் நிலை தொடர்ந்து வருகிறது.

இதனால் ஆண்டுக்கு 60க்கும் மேற்பட்ட விபத்துக்கள் சராசரியாக நடைபெற்று வருகிறது.. உயிரிழப்புகளும், பலரும் காயமடைந்து வருகின்றனர்..

உயிரிழப்புகளை தவிர காயமடைந்தால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்வது கிடையாது. இது குறித்து பலமுறை பதிவு செய்தும் கோவில்பட்டியில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் குறைந்த பட்ச நடவடிக்கை கூட எடுக்கவில்லை..

காவல்துறை சார்பில் டி.எஸ்.பி.வெங்கடேஷ் பஸ்கள் கூடுதல் பஸ் நிலையத்திற்குள்  உள்ளே சென்று நடவடிக்கை எடுத்தார். அதுவும் சில தினங்கள் மட்டுமே நடந்தது மற்ற அரசு துறையினர் ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதுவும் பாதியில் நின்று விட்டது.

அரசு அதிகாரிகளின்  அலட்சியம் காரணமாக நேற்றும் கூடுதல் பச நிலையம் எதிரே நான்குவழி சாலையில் நெடுஞ்சாலையில் இறக்கி விடப்பட்ட கிருஷ்ண பிரியா என்பவர் கார் மோதி உயிரிழந்துள்ளார்.

கோவில்பட்டி மீனாட்சி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் கலசங்கலிங்கம் கல்லூரியில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணப்ரியா(வயது 34). இவர் மதுரை சிப்காட்டில் முதுநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று மாலை வேலை முடித்து, மதுரையில் இருந்து அரசு பஸ்சில் கோவில்பட்டிக்கு வந்தார். அரசு பைபாஸ் ரைடர் பஸ் என்பதால் ஊருக்குள் வராமல், புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பஸ் நிலையத்துக்கு முன்புள்ள சர்வீஸ்  சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வது வழக்கம்.

ஆனால், கிருஷ்ணப்ரியா வந்து பஸ், சர்வீஸ்  சாலைக்கு வராமல் நான்குவழிச்சாலையில் பஸ் நிலையத்துக்கு எதிர்புறம் நின்று பயணிகளை இறக்கி விட்டுச்சென்றது..கிருஷ்ணபிரியாவை வீட்டுக்கு அழைத்துச்செல்ல விவேகானந்தன் பஸ் நிலையம் முன்பு காத்திருந்தார். இதனால்இந்தய நிலையில் பஸ்சில் இருந்து இறங்கிய கிருஷ்ணப்ரியா நான்குவழிச்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் சென்ற கார், அவர் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த  கிருஷ்ணப்ரியா சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார்ர், கிருஷ்ணப்ரியாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநர் நாகர்கோவில் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த அருள்சாமி மகன் சாத்ராஜ்(29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்கு அழைத்து செல்ல காத்திருந்த கிருஷ்ணப்பிரியாவின் கணவர், மனைவி உடலை பார்த்து அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.கணவர் கண் முன்பு மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இனிமேலும் இது போன்ற சம்ப;வம் நடந்து விடாமல் போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *