• April 28, 2025

Month: March 2025

ஆன்மிகம்

முருகப்பெருமான் அபிஷேக பொருட்களும், அவற்றின் பலன்களும்

தெய்வ வழிபாட்டில் மிக முக்கியமானது அபிஷேகம் செய்வது. அனைத்து தெய்வங்களுக்குமே பல விதமான அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். சிவனை அபிஷேக பிரியர் என்றே சொல்லுவதுண்டு. அதே போல் முருகபெருமான்  என்றால் பால், பஞ்சாமிர்தம் தான் நினைவிற்கு வரும். கோவிலில் சுவாமிக்கு நடக்கும் மொத்த அபிஷேகத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு சிலர் செய்வார்கள். இதற்கு சர்வ அபிஷேகம் என்று பொருள். சர்வ அபிஷேகம், சகல விதமான பாவ நிவர்த்தியை தரும் என்பார்கள். இப்படி மொத்தமாக அபிஷேகத்திற்கு பணம் […]

கோவில்பட்டி

இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி நகர திமுக சார்பில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கண் சிகிச்சை முகாமை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திமுக நகர செயலாளர் கருணாநிதி தொடங்கி வைத்தார். முகாமில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினர்கள்,திமுக நகர அவைத்தலைவர் முனியசாமி,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,மாரிச்சாமி,நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன் மற்றும் பலர் கலந்து […]

சினிமா

முத்தக்காட்சி இருந்ததால், பிளாக்பஸ்டர் படத்தை நிராகரித்த நடிகை

புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான  படம் ‘உப்பெனா’.இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராகி விட்டார். இருந்தபோதும், இந்த பிளாக்பஸ்டர் படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஷிவானி ராஜசேகர். இவர் இப்படத்தில் லிப்லாக் காட்சிகள் இருந்ததால் நிராகரித்திருக்கிறார். […]

செய்திகள்

கோவில்பட்டி மில் தொழிலாளிக்கு பணி நிறைவு பாராட்டு

கோவில்பட்டியில் மில் தொழிலாளிக்கு சிந்தாமணி நகர் பொதுமக்கள் பணி நிறைவு பாராட்டு  தெரிவித்தனர். கோவில்பட்டி வள்ளி டெக்ஸ்டைல் மில்லில் தொழிலாளியாக சிந்தாமணி நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் 40 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி மாரிமுத்துவுக்கு சிந்தாமணி நகர்  பொதுமக்கள் சார்பில் பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் சிந்தாமணி நகர் வளர்ச்சிக்குழு தலைவர் பால்ராஜ் தலைமையில்   ஊர் பொதுமக்கள் பணி நிறைவு பெற்ற மில் தொழிலாளி மாரிமுத்துவுக்கு […]

சினிமா

நயன்தாரா நடிக்கும் படத்தில் வில்லனாகும் அருண் விஜய்?

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.  மேலும், இப்படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது. ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர படங்களில் அருண் விஜய் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தில் முக்கிய […]

பொது தகவல்கள்

எண்ணெய் பசை சருமம் பொலிவு பெற…

சரும பிரச்சினைகளை அதிகமாக எண்ணெய் பசை சருமத்தினர் தான் சந்திப்பார்கள். அவர்களது முகத்தில் எந்நேரமும் எண்ணெய் வழிந்தவாறு இருப்பதால், அவர்களின் முகம் பொலிவிழந்து, ஒருவித கருமையாக காணப்படும். இவர்களது முகத்தை பளிச்சென்று வெள்ளையாக்க சில இயற்கை வழிகளை பார்க்கலாம். 4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்ய […]

செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள்; மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி காலையில்  அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார், இந்த நிகழ்வை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில்  அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.அப்போது […]

செய்திகள்

குற்றாலம் பகுதியில் பலத்த மழை; அருவிகளில் வெள்ளம்

தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்தது. மேலும் பகல் நேரங்களில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முந்தினம இரவு தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நள்ளிரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலத்தில் குற்றாலம் மெயின் […]