தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்திய ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல்
தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாக வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பவத்தன்று தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு நோக்கி, கருங்கற்கள் ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய கப்பல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கப்பலை தடுத்து நிறுத்துமாறு கடலோர காவல் படைக்கு மத்திய வருவாய் புலனாய்வு […]