தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ரூ. 1,799 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இவரது மகள் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதன்படி, சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி. இவர் காந்திய கொள்கையான அகிம்சையை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘காந்தி தாத்தா செட்டு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளையும் விருதுகளையும் […]
இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, படை தலைவன், தருணம், டென் ஹவர்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த பொங்கல் ரேஸில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படமும் நேற்று இணைந்தது. அதன்படி, இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, […]
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கலாம்; ஆட்சியர் இளம்பகவத்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க; இளம்ப்கவத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 988 நியாயவிலைக் கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள […]
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், இச்சம்பவத்திற்கு நீதி கேட்டும் பாஜக மகளிரணி சார்பில் இன்று பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிரணி பேரணியாக செல்லும் என்று பாஜக அறிவித்திருந்தது. […]
வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்தநாள்; சிலைக்கு கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை
தமிழ் மண்ணின் உரிமைக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி அருகே கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கடம்பூர் செ.ராஜூ எ.ம்..எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் […]
குழந்தைகளால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களின் ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி. இதில், முக்கிய கதாபாத்திரமாக வரும் ஜெர்ரியுடன் புஷ்பா ஸ்டைலை ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜெர்ரி மட்டுமில்லாமல், புஷ்பாவின் நடை மற்றும் நடன அசைவுகள் டாமுடனும் ஒப்பிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, புஷ்பா டாமை காபி அடித்துள்ளார் என்றும் 100 சதவிகிதம் டாம் அண்ட் ஜெர்ரியிலிருந்து இந்த ஸ்டைலை புஷ்பா படக்குழு காபி அடித்துள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். புஷ்பா மட்டுமில்லாமல்’, […]
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றிருந்தார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்நிலையில், […]
இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர், அருண் விஜய் நடித்துள்ள வணங்கான், கலையரசன் நடித்திருக்கும் மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வரும் 10-ம் தேதியே திரைக்கு வருகிறது. அதேபோல், ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை மற்றும் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் நேசிப்பாயா ஆகிய படங்கள் 14-ம் தேதியும், சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன், கிஷன் தாஸ் நடித்திருக்கும் தருணம், சிபி […]
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியில் சந்தேகப்படும்படியான நபர்கள் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் தெரிவித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில், தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் போலீசார் செல்லத்துரை, சுரேஷ், அருண், செந்தில் ஆகியோர் லிங்கம்பட்டிக்கு மாறுவேடத்தில் சென்று சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர். சிறிது நேரத்தில் அந்த வீட்டை […]