வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்தநாள்; சிலைக்கு கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை

 வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்தநாள்; சிலைக்கு கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை

தமிழ் மண்ணின் உரிமைக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும்

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை

முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் 265-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

கோவில்பட்டி அருகே கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கடம்பூர் செ.ராஜூ எ.ம்..எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார்

விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த  கடம்பூர் ராஜு கூறியதாவது:-

திமுக ஆட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு செய்யப்படவில்லை. பல மணிமண்டபங்களில் பணியாளர்கள் இல்லாத நிலை தான் உள்ளது. அதேபோன்று பல மணிமண்டபங்களில் நூலகங்களும் அமைக்கப்படவில்லை. இது நாட்டை அவமானப்படுத்தப்படும் செயல், தலைவர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் கவுரவம் இதுதான். 

வாழுகின்ற மக்களையே ஒழுங்காக வாழ வைக்கவில்லை. வாழ்ந்து மறைந்த தலைவர்களை இவர்கள் இப்படித்தான் நடத்துவார்கள் என்பதற்கு இந்த ஆட்சி ஒர் உதாரணமாக உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

விளாத்திகுளத்தில் தேமுதிக

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266வது பிறந்தநாளை முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவப்படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு  தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி மாரியப்பன், கோவில்பட்டி ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் வீரோவன்,விளாத்திகுளம் நகர அவைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட தொண்டரனி தங்கமணி, சிங்கிலிபட்டி சங்கரன், ராஜேந்திரன், சிங்கிலிபட்டி தலைவர் செல்வக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *