கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியாரின் 51 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாண்டவர்மங்கலத்தில் உள்ள பெரியார் முழு உருவச் சிலைக்கு,மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை, மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் […]
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கோவில்பட்டி, நோய் தடுப்பு மருத்துவத்துறை, பெல் ஸ்டார் மைக்ரோ நிதி நிறுவனம், நாலாட்டின்புத்தூர் கிராம ஊராட்சி ஆகியவை இணைந்து நாலாட்டின்புத்தூர் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தின. பஞ்சாயத்து தலைவர் கடல் ராணி அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பெட்காட் […]
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்கள் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீராங்கனைகள் 6 பேர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பெண்கள் ஆக்கி போட்டி நாளை 26-ந்தேதி முதல் 30- ம் தேதி வரை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடத்துகிறது இப் போட்டியில் மொத்தம் 33 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக அணிகள் விளையாட உள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்கள் ஆக்கி அணி இந்த போட்டியில் விளையாடுவதற்கு பயிற்சி முகாமில் […]
தமிழ் சினிமாவில் இந்த வருடம் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் 20-க்கும் குறைவான படங்களே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இடங்களில் உள்ள தமிழ் படங்களை இங்க காணலாம். ‘தி கோட்‘ வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு நடந்தாலும், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினரின் எண்ணம் முழுவதும் எம்.ஜி.ஆர். மாளிகையிலேயே இருந்துள்ளது. ஆளுங்கட்சியாக இருக்கும் போதே முழு எண்ணமும் அதிமுக குறித்தே இருக்கின்றது. இதுவே அதிமுக ஆட்சி வரப்போகிறது என்ற பயம் திமுகவிற்கு இப்போதே வந்துவிட்டதற்கான வெளிப்பாடு. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்த கனிமவள திருத்த சட்ட விவாதத்தின்போது கனிமங்களுக்கான ஏலத்தை நடத்துவதுதன் முலமாக முறைகேடுகளை […]
கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதந் தோறும் ஒரு நாள் வெவ்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி 40- வது மாதத்திற்கான அன்னதான நிகழ்ச்சி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர். எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். கம்லேஸ்வரர் மேட்ச் ஒர்க்ஸ் அதிபர் நடராஜன் வரவேற்று பேசினார். தொழில் அதிபர்கள் சுதர்சன் டிரேடிங் தனபால், சங்கர் மேட்ச் […]
கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மருத்துவத்துறை சார்பில் கோவில்பட்டி நகராட்சி பொது சுகாதாரப் பணி டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கான இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கோவில்பட்டி நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் நடந்த முகாமில் மாவட்ட தலைமை மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன் கலந்து கொண்டு மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள், தடுக்கும் இயற்கை மருத்துவம் குறித்து பேசினார். 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கண் குவளை, வலிநிவராண ஆயில், […]
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ரன்பீர் கபூருடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அமீர்கானின் பாதுகாவலருடன் நடிகர் ரன்பீர் கபூர் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருப்பது இந்த தகவல் பரவ காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படம் வைரலானதையடுத்து, சிலர் இருவரும் இணைய உள்ளனர் என்றும், சிலர் சாதாரண சந்திப்பாக இருக்கலாம் என்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இளையராஜாவை சந்தித்து விடுதலை 2 படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர். அதன்படி, […]