ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதந் தோறும் ஒரு நாள் வெவ்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி 40- வது மாதத்திற்கான அன்னதான நிகழ்ச்சி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர். எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். கம்லேஸ்வரர் மேட்ச் ஒர்க்ஸ் அதிபர் நடராஜன் வரவேற்று பேசினார். தொழில் அதிபர்கள் சுதர்சன் டிரேடிங் தனபால், சங்கர் மேட்ச் நிறுவனம் கொல்லம் சேகர், கே.கே,ஆர். சுவீட்ஸ் ஆக்ரா காளிராஜ், ரியல் எஸ்டேட் ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பராசக்தி மேட்ச் இன்டஸ்டீரிஸ் அதிபர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி, ஜோதிலிங்கம் பட்டு மஹால் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் சண்முகவேல், தங்கராஜ், பாண்டியன், ஆசிரியர் ஜீவானந்தம், சேகர், பசுமை இயக்கம் செந்தில் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உலக மக்கள் நலன் வேண்டி செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முடிவில் பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி நன்றி கூறினார்.