டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கு இயற்கை மருத்துவம் விழிப்புணர்வு முகாம்
கோவில்பட்டி அரசு தலைமை மாவட்ட மருத்துவமனை இயற்கை மருத்துவத்துறை சார்பில் கோவில்பட்டி நகராட்சி பொது சுகாதாரப் பணி டெங்கு தடுப்பு களப் பணியாளர்களுக்கான இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி நகராட்சி பழைய அலுவலக கட்டிடத்தில் நடந்த முகாமில் மாவட்ட தலைமை மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன் கலந்து கொண்டு மழைக் காலங்களில் ஏற்படும் நோய்கள், தடுக்கும் இயற்கை மருத்துவம் குறித்து பேசினார்.
50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கண் குவளை, வலிநிவராண ஆயில், கைகால் இடுப்பு வலி மூலிகை மாஸ்கரோல் வழங்கப்பட்டது. இயற்கை மருத்துவத்தில் கண் குவளை மூலம் கண்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்து செயல் விளக்கம் பயிற்சி அளிக்கப்பட்டது.