மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்கள் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீராங்கனைகள் 6 பேர்
![மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்கள் ஆக்கி அணியில் கோவில்பட்டி வீராங்கனைகள் 6 பேர்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/1a49b839-7db3-4a3f-8cd1-610df33551c7-scaled-e1735028331965-850x560.jpeg)
பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையில் பெண்கள் ஆக்கி போட்டி நாளை 26-ந்தேதி முதல் 30- ம் தேதி வரை திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடத்துகிறது
இப் போட்டியில் மொத்தம் 33 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக அணிகள் விளையாட உள்ளன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்கள் ஆக்கி அணி இந்த போட்டியில் விளையாடுவதற்கு பயிற்சி முகாமில் பங்கெடுத்து வருகிறது. இந்த பயிற்சியில் கோவில்பட்டி வீராங்கனைகள் அழகுசுபா, விஜயலட்சுமி, கஜிதா பாரதி, சண்முகப்பிரியா, சண்முகப்பிரியா, மதனா ஆகிய 6 வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளராக தங்கராஜ் ஆகியோர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆக்கி அணிக்கு தேர்வாகி தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்
இந்த வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம் தலைமையில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது செயலாளர். செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா நாகமுத்து மற்றும் உறுப்பினர்கள் மாரியப்பன், ஜார்ஜ், ஈஸ்டர் மனோகரன், பெரியதுரை, உமா சங்கர், அழகுதுரை, மேரி, வினோ ஹெலன், மேரி உடற்கல்வி ஆசிரியர்கள் முருகன், சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி சுரேந்திரன் ஜெய் கணேஷ் வேல்ச்சாமி காளிதாஸ் ஆகியோர் பாராட்டினர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)