நாலாட்டின்புத்தூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

 நாலாட்டின்புத்தூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கோவில்பட்டி, நோய் தடுப்பு மருத்துவத்துறை, பெல் ஸ்டார்  மைக்ரோ நிதி நிறுவனம், நாலாட்டின்புத்தூர் கிராம ஊராட்சி ஆகியவை  இணைந்து நாலாட்டின்புத்தூர் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தின.

பஞ்சாயத்து தலைவர் கடல் ராணி அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட்   இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பெட்காட் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் விஜயன், பெல் ஸ்டார் நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளர் முத்துமாலை, கிளை மேலாளர் மணிகண்டன், கோவில்பட்டி துணை மேலாளர் முத்துராஜ், கோவில்பட்டி வட்டார பயிற்றுநர் முருகலட்சுமி, பெல்ஸ்டார் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமில்  காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் ராகவன் மற்றும் பொது மருத்துவர் வினோதினி மற்றும் செவிலியர்கள் முத்துலட்சுமி, இசக்கிபவித்ரா, கலைவாணி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொது மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல். தலைவலி. காது. மூக்கு. தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு  மூலமாக மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. சமூக ஆர்வலர் ராஜ் மற்றும்  ஜெயராஜ் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை   செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *