செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 2021ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் 2-வது பாகம் உலகம் முழுவதும் கடந்த 5-ஆம் தேதி 12ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர். படத்தை […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். சமீபத்தில் இவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து, இவர் தற்போது பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 – வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், விக்ரமின் 63-வது படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் ‘விக்ரம் 63′ படத்தை இயக்க உள்ளார்.’மாவீரன்’ […]
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஜோடி’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ […]
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி நகரில் பல்வேறு இடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மந்திதோப்பு கண்மாய் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.. இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.,சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இந்த பகுதிகளை கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கடம்பூர் ராஜு நேரில் பார்வையிட்டார். கண்மாய்உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் […]
தொடர் மழையினால் கண்மாய்கள் நிறைந்து கோவில்பட்டியில் வெள்ளப்பெருக்கு; இளையரசனேந்தல் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை மிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை பகலிலும் நீடித்தது, அன்றைய தினம் இரவிலும் பலத்த […]
வெள்ள அபாய எச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிப்போர் நிவாரண முகாம்களில் தங்கும்படி ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 60 ஆயிரம் கன அடி நீர் இன்று (13.12.2024) வந்து கொண்டிருகிறது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் […]
கோவில்பட்டி சிறுவன் சாவில் உண்மையான குற்றவாளி விரைவில் கைது; போலீஸ் சூப்பிரண்டு ஆல்பா்ட்
கோவில்பட்டி சிறுவன் கருப்பசாமி மர்ம சாவு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் கார்த்திக் முருகன் (35) என்பவர் தனது 10 வயது மகன் கருப்பசாமி (10) என்பவரை காணவில்லை என்று புகார் அளித்தார். இதன் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகன்நாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதிலும் மழை பெய்துவரும் நிலையில் கோவில்பட்டியில் அதிக அளவு மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.30 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் ஊர்கள் வாரியாக( மில்லி மீட்டரில்) வருமாறு:- கோவில்பட்டி- 364.70 விளாத்திகுளம் – 186.00 எட்டயபுரம் – 174.00 வைப்பார்-169.00 கழுகுமலை-156.00 கடம்பூர்- 156.00 ஸ்ரீவைகுண்டம்-145.50 சூரங்குடி- 127.00 காடல்குடி- 121.00 கயத்தார்-113.00 காயல்பட்டினம்- 105.00 […]
கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன்- பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி(வயது 1௦) அங்குள்ள நகராட்சி பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தான். கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சூழலில் 9-ந்தேதி காலையில் திடீர் என மாயமானான். பல இடங்களிலும் தேடிபார்த்து கிடைக்காத நிலையில் மறுநாள் காலை பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் கருப்பசாமி சாவில் மர்மம் நீடிகிறது. அவனது உடல் தூத்துக்குடி […]