வெள்ள அபாய எச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிப்போர் நிவாரண முகாம்களில் தங்கும்படி ஆட்சியர் இளம்பக்வத் வேண்டுகோள்
![வெள்ள அபாய எச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிப்போர் நிவாரண முகாம்களில் தங்கும்படி ஆட்சியர் இளம்பக்வத் வேண்டுகோள்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/collectorilambagawat_1724217340-1.jpg)
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 60 ஆயிரம் கன அடி நீர் இன்று (13.12.2024) வந்து கொண்டிருகிறது.
மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மாவட்டத்தின் மழை நீர் தேங்கியுள்ள இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் தங்களுக்கு அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு வந்து பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.
மேலும், மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து மிகவும் உன்னிப்பாக அனைத்து நிலை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது
இவ்வாறு மாவட்ட ஆட்சியர். இளம்பகவத் தெரிவித்துள்ளார்..
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)