• February 7, 2025

Month: December 2024

சினிமா

‘கொம்பன்’ இயக்குனர் படத்தில் நடிக்கும் அருள்நிதி

தமிழ் சினிமாவில் ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அருள்நிதி பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பம்பர் படத்தின் இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்திலும், தேன் படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தற்போது மற்றொரு புதிய […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மீனவர்கள், கடலுக்கு செல்ல மீண்டும் தடை; துறைமுகத்தில் படகுகள் நிறுத்தம்  

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள்கிழமை உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கிவைத்த 55 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அந்த பகுதியில் வசிக்கும் சின்ன மாரி என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 55 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் சின்னமாரிக்கு எப்படி வந்தது? இதன் பின்னணியில் […]

செய்திகள்

ஜெராக்ஸ் மிஷினில் 100 ரூபாய் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வான்துலுக்கப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி (வயது 59). இவர் தனது வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து உள்ளார்.அதில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக கூறப்படுகிறது. ஆசைதம்பி நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் ஒரு காய்கறி கடையில் பொருட்கள் வாங்கினார்.அதற்கு கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த ரூ.100 கள்ளநோட்டை கடைக்காரரிடம் கொடுத்தார். அதை வாங்கி பார்த்த கடைக்காரர் முகம்மது சபீர் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து கேட்ட போது […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 20 ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும்  இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது . டிசம்பர் மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20.12.2024 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து […]

கோவில்பட்டி

தொடர்மழை, காற்றில் சேதமடைந்த படகுகள்; 7 பேருக்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதி உதவி

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவைப்பார், சிப்பிகுளத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக  சேதமடைந்துள்ள படகுகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் பார்வையிட்டார்/  சேதமடைந்துள்ள படகுகளின் உரிமையாளர்கள் 7 பேர்களுக்கு சட்டமன்ற உறுப்பினரின் சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார். மேலும் அரசின் சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார் எம்.எல்.ஏ.வுடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னமாரிமுத்து  தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் தனியார் நிறுவன பாதுகாவலர்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின்ரோடு-இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு பகுதி மிகவும் நெருக்கடியான இடமாகும். அடிக்கடி இந்த பகுதில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும் அவர்களையும் கடந்து  அத்துமீறும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பது மிகவும் கஷ்டமான பணியாகும். காலை, மாலை போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் போக்குவரத்து காவலர்கள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில்  பணியாற்றும் பாதுகாவலர் ஆறுமுக கண்ணன் என்பவரை பார்க்கலாம், தன்னார்வத்துடன் சாலையில் நின்று போக்குவரத்தினை சரி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மண்வெட்டியால் தாக்கி மகனை கொன்ற தந்தை

கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் பிரியதன் (வயது 82), இவருடைய மகன் பாலமுருகன் (38). கட்டிட தொழிலாளியான பாலமுருகனுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கற்பகத்திற்கு காது கேட்காது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் தந்தைக்கு மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.  இதில் ஆத்திரம் அடைந்த தந்தை மகன் பாலமுருகனை மண்வெட்டியை எடுத்து வெட்டிஎதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் சமபவ இடத்திலேயே இறந்து […]

தூத்துக்குடி

மழை வெள்ளத்தால் 3 லட்சம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆத்தூர் கஸ்பா, மேலாத்தூர், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், வடியவேல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகல் கவலையடைந்துள்ளனர். மழை வெள்ளத்தின் போது அடைக்கப்பட்ட போப்பாஞ்சான் வரப்பாஞ்சான் வடிகால் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இதனிடையே, வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து […]