• February 7, 2025

Month: December 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காலை நேரத்தில் சாலையை மறைத்த பனிமூட்டம்

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்து ஓய்ந்து இருக்கிறது, சில நாட்களாக வெயிலை காணமுடிகிறது. குடியிருப்பு பகுதிகளில் காலி மனைகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் இப்போது தான் காய்ந்து வருகிறது. இந்த் நிலையில் மார்கழி மாதம் பிறந்து விட்டது. மார்கழி என்றாலே குளிர் வாட்டி வதைக்கும் மாதமாயிற்றே… வழக்கம்போல் குளிர் அதிகம் இருந்தது, இந்த நிலையில் நேற்று காலையில் கடும் பனிமூட்டம் தென்பட்டது. சாலையே தெரியாத அளவுக்கு பனி மூடி இருந்ததால் வாகன ஓட்டிகள் […]

சினிமா

ரஜினிகாந்துடன் நடிப்பதால் எனது  நீண்ட நாள் கனவு நனவானது – நடிகர் உபேந்திரா

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குனருமான உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘யு.ஐ’. இப்படம் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படமாக உருவாகி உள்ளது. இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர்.  கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இப்படம் ரூ.100 கோடி ரூபாய் பட்ஜட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த […]

பொது தகவல்கள்

பாத வெடிப்பு ஏன் ஏற்படுகிறது?

பாதங்களில் உள்ள தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம். இதனால் கால்களில் வறண்ட சருமம், சொரசொரப்பான பாதம், பித்த வெடிப்பு, கால் ஆணி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்சனையாக மட்டுமின்றி, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகவும் உள்ளது. பொதுவாக, சருமம் வறண்டு போகும்போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். […]

சினிமா

ஒரே நாளில் சமுத்திரக்கனியின் 2 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கருடன், நந்தன், ஹிட் லிஸ்ட்’ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இவர் தற்போது 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன. ‘ராஜாகிளி, திரு மாணிக்கம்’ ஆகிய இரண்டு படங்கள்தான் […]

சினிமா

நடிகர் கோதண்டராமன் காலமானார்

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த நடிகர் கோதண்டராமன் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோதண்டராமன், சிகிச்சை பலனின்றி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.“கலகலப்பு” திரைப்படத்தில் கோதண்டராமன் நடிகர் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் வேலை பார்த்த்துள்ளார். மேலும், பகவதி, திருப்பதி, கிரீடம், சிங்கம், வேதாளம் […]

ஆன்மிகம்

சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம்

புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு. வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம். மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை, சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப் பதால், சகல பாவங்களும் விலகும். வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், […]

ஆன்மிகம்

ஆன்மிக கேள்வி-பதில்கள்

கேள்வி: முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டு வாசலில் வைப்பதன் நோக்கம் என்ன? பதில்:-மங்கல பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. அதனால், மங்களகரமாக கண்ணாடியை வைப்பர். சிலர் கண்ணாடியை திருஷ்டிதோஷம் நீங்கவும் வாசலில் வைக்கிறார்கள். கேள்வி: வாசலில் சிலர் கடவுளின் உருவத்தையே கோலமாக இட்டு வருகின்றனர். இது சரியான முறையா? பதில்:கோலம் என்றால் “அழகு’. இதனை வடமொழியில் “ரங்கவல்லி’ என்பர். ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்று வைத்துக் கொள்ளலாம். இதன் தரைப்பகுதியில் அழகுக்காக கொடிகள் போன்று […]

செய்திகள்

வரிபாக்கியை  குறைக்க ரூ.3‌‍.5 லட்சம் லஞ்சம்;மதுரையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 3 பேர் கைது

வரிபாக்கியை  குறைக்க ரூ.3‌‍.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரையில் ஜி.எஸ்.டி.அதிகாரிகள் 3 பேர் கைதாகி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:- மதுரையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி குளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார். அப்போது அவர், ஜிஎஸ்டிவரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் […]

செய்திகள்

வழக்குகளில் இருந்து விடுபட டி.டி.வி.தினகரன், பா.ஜ.க.விடம் சரண்; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் அ.தி.மு.க.அமைப்புசெயலாளர்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் அ.தி.மு.க. அழிவு பாதைக்கு செல்லும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜெயக்குமார் கூறியதாவது;- “பா.ஜ.க. அல்லாத மற்ற எந்த கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்களுடன் கூட்டணி நேற்றும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை என்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். […]