கோவில்பட்டியில் காலை நேரத்தில் சாலையை மறைத்த பனிமூட்டம்
![கோவில்பட்டியில் காலை நேரத்தில் சாலையை மறைத்த பனிமூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/d5fefcfb-fa9d-4939-8cb7-42677e8df7f1-850x560.jpeg)
கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்து ஓய்ந்து இருக்கிறது, சில நாட்களாக வெயிலை காணமுடிகிறது.
குடியிருப்பு பகுதிகளில் காலி மனைகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் இப்போது தான் காய்ந்து வருகிறது.
இந்த் நிலையில் மார்கழி மாதம் பிறந்து விட்டது. மார்கழி என்றாலே குளிர் வாட்டி வதைக்கும் மாதமாயிற்றே… வழக்கம்போல் குளிர் அதிகம் இருந்தது,
இந்த நிலையில் நேற்று காலையில் கடும் பனிமூட்டம் தென்பட்டது. சாலையே தெரியாத அளவுக்கு பனி மூடி இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர். மேலும் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பினார்கள்.
காலை 7.45 மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக பனி மூட்டம் மறைய தொடங்கியது. குளிர் அதிகம் இருந்தது, நடைபயிற்சி சென்றவர்கள் அதிக அளவில் குல்லா அணிந்து சென்றதை காண முடிந்தது.
காலை நேரத்தில் கோவில்பட்டியில் இருந்து வெளியூர் கிளம்பிய பஸ்களில் கூட்டம் அதிகம் இல்லாமல் காலியாக காணப்பட்டது,.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)