• April 19, 2025

Month: September 2024

சினிமா

`அமரன்’ படத்தில் நடித்த அனுபவம்-சாய் பல்லவி

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரோமோசன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மலேசியாவில் நடந்த புரோமோஷன் விழாவில் ‘அமரன்’ படத்தில் நடித்தது குறித்து நடிகை சாய் பல்லவி  பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் இதுவரை ஒருவரின் வாழ்க்கை வரலாறு […]

சினிமா

ஹாரி பாட்டர் பட நடிகை  மேகி ஸ்மித் மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித். இவர் ‘தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி’, ‘ஹாரி பாட்டர்’, ‘டோவ்ன்டன் அபே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது 89-வயதான இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை […]

சினிமா

அஜித் தொடங்கிய கார் பந்தய அணி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, குட்பேட் அக்லி படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. நடிகர் அஜித் குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான். சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்தநிலையில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் […]

சினிமா

‘கண்ணப்பா’ படத்தில் நடிகை ஐஸ்வர்யாவின் தோற்றம்

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால், […]

தூத்துக்குடி

உலக இருதயதினம்: தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணி

உலக இருதய தினத்தை  முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  மருத்துவமனை முதல்வர்  சிவக்குமார், பேரணியை  கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக  சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது. இருதய நோய் குறித்தும் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமார் 100க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி முடிவில் இருதய மருத்துவத்துறை சார்பாக உலக இருதய […]

கோவில்பட்டி

கோவில்பட்டி விமானபயிற்சி மையம்: ஓடுதளத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்கான டெண்டர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள  விமான ஓடுதளத்தை  விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என்று  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போது தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார் அதை தொடர்ந்து தற்போது ஆரம்ப கட்ட பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது,.இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள ஏலம் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு நிறுவனமான TIDCO, கோவில்பட்டி விமான ஓடுதளத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான மாஸ்டர் […]

செய்திகள்

சாத்தான்குளம் அருகே கல்குவாரி பாறைகள் உடைப்பு நிறுத்தப்படுமா? அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் கலுங்கு விளை சாலையில் தனியார் சார்பில் கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வெடிவைத்து பாறைகள் உடைக்கப் படுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.  இதனையடுத்து கல்குவாரியை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெடுங்குளத்தில் அப்பகுதியை சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் கண்ணீல் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கனிம வள உதவி […]

செய்திகள்

பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார்.  19  நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் ” என்று கூறினார். இந்த நிலையில்  பிரதமர் […]