கோவில்பட்டி விமானபயிற்சி மையம்: ஓடுதளத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்கான டெண்டர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போது தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்
அதை தொடர்ந்து தற்போது ஆரம்ப கட்ட பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது,.இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள ஏலம் அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு நிறுவனமான TIDCO, கோவில்பட்டி விமான ஓடுதளத்தில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான மாஸ்டர் பிளான், விரிவான பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனைக்கான ஆலோசகரை தேர்வு செய்ய உள்ளது.
இந்த சூழலில், டெண்டர் ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சேவைகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஆர்வமுள்ள ஆலோசகர்களை TIDCO அழைக்கிறது.
ஆர்வமுள்ள ஆலோசகர் டெண்டரை https://tidco.com மற்றும் https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏல செயல்முறைக்கான அட்டவணை பின்வருமாறு:-
1. ஏலத்திற்கு முந்தைய கூட்டம் 7.10.2024 அன்று மாலை 3 மணிக்கு TIDCO அலுவலகதில் நடைபெறும்.
2.https://tntenders.gov.in மூலம் 21.10.2024 அன்று பிற்பகல் 3. மணிக்கு அல்லது அதற்கு முன் முன்மொழிவுகள்/ ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்
3. தொழில்நுட்ப முன்மொழிவுகள்/ ஏலங்கள் 21.10.2024 அன்று மாலை 4. மணிக்கு TIDCO அலுவலகத்தில் திறக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது,
