Month: July 2024

கோவில்பட்டி

12 ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கான கட்டிட அனுமதி நிறுத்தி வைப்பு; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம்

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜனசங்கத்தின்  கோவில்பட்டி மண்டல செயலாளர் கற்பூரராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன்மோகன், சீத்தாராமன், மாநில பிரதிநிதி வெங்கடேஷ் ஆகியோர் கோவில்பட்டி  வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி  இருந்ததாவது:- இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கு கட்டிட அனுமதி கடந்த 6 மாதமாக காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..காரணம் கேட்டாலும் சரியான முறையான பதில் இல்லை. இதனால் வங்கியில் […]

சிறுகதை

பஸ்சில் பசியின் குரல் …

கோவில்பட்டி பஸ்நிலையம்..மதியம் 2 மணி.. வெயில் கொளுத்தியது .பஸ்கள் அங்கும் இங்கும் ஹாரன் அடித்தபடி பஸ்நிலையத்துக்குள் சீறிப்பாய்ந்தவண்ணம் இருக்க..பயணிகள் சென்றவண்ணம் இருந்தனர்.தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஒரு பஸ்சில் திபு திபு என்று கூட்டம் ஏறியது..இருக்கையை பிடிக்க கூட்டம் அலை மோதியது.இருக்கை கிடைத்தவர்கள் அப்பாட..இடம் கிடைச்சுது இல்லைன்னா நின்னு தொலைக்கணும் ..கூட்ட நெரிசலில் நசுங்கிப்புடுவாங்க என்று சிலர் முணுமுணுத்தபடி இருந்தனர்.பஸ்சில் கூட்டம் நிரம்பியபின்னும் டிரைவர் பஸ்சை எடுக்கவில்லை. வியர்வையில் பயணிகள் நனைந்தனர்.என்னடா..இது..பஸ்சை உடனே எடுக்கமாட்டாங்க போலிருக்கே..எப்பய்யா பஸ்சை எடுப்பீங்க என்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் திருநங்கைகள் விழிப்புணர்வு குறும்படத்தின் பாடல், முதல் போஸ்டர் வெளியீடு

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வுக்காக ‘திரு’ என்ற 35 நிமிட குறும்படத்தை தூத்துக்குடியை சேர்ந்த அருந்ததி அரசு இயக்கி உள்ளார். இந்த படத்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையுடன் இணைந்து, வானம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக் (முதல் போஸ்டர்)வெளியீட்டு விழா கோவில்பட்டியில் நேற்று நடந்தது. குக்கூ, ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராஜு முருகன் பாடல் மற்றும் முதல் போஸ்டர் ஆகியவற்றை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “திரு […]

கோவில்பட்டி

கோவிலுக்கு செல்லும் பாதையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி, செண்பகராஜன், தமாகா மாவட்ட தலைவர் ராஜகோபால், தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் கிராம மக்கள்  நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கன்வாடி கட்டிடத்தை ஊருக்குள் கட்ட வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- ஈராச்சி கிராமத்தில் கோவிலுக்கு செல்லும் பாதையில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ஜேசிபி இயந்திரம் […]

கோவில்பட்டி

‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம்’ நூல் வெளியீட்டு விழா

 கோவில்பட்டி அங்கோ பிளாசாவில் ‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  முன்னாள் அமைச்சர் கடம்பூா் ராஜூ எம். எல். ஏ தலைமை தாங்கினார். தேவா் வரலாற்று ஆய்வாளா் நவமணி, முன்னாள் தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநா் விஜயகுமாா், திரைப்பட தயாரிப்பாளா் சவுத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனர், முனைவர் கருத்தப்பாண்டி எழுதிய ‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம்’ என்ற நூலை திரைப்பட நடிகா் வேல.ராமமூா்த்தி வெளியிட, முதல் பிரதியை நெல்லை பசும்பொன் தேவா் முன்னேற்றக் […]