12 ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கான கட்டிட அனுமதி நிறுத்தி வைப்பு; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜனசங்கத்தின் கோவில்பட்டி மண்டல செயலாளர் கற்பூரராஜ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன்மோகன், சீத்தாராமன், மாநில பிரதிநிதி வெங்கடேஷ் ஆகியோர் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 ஊராட்சிகளில் புதிய வீடுகளுக்கு கட்டிட அனுமதி கடந்த 6 மாதமாக காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..காரணம் கேட்டாலும் சரியான முறையான பதில் இல்லை.
இதனால் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டும் நபர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. மேலும் சிலரின் வங்கியில் கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருப்பின் பஞ்சாயத்திற்கு வருவாயும் இழப்பு ஏற்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தங்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளோம் ஆகவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் நகல் மற்றும் 6மாதமாக காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டிட அனுமதிக்காக நபர்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றை ஊரக வளர்ச்சித் துறை செயலாளர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சூழ்நிலையில் தற்போது புதிய கட்டிட அனுமதியை 6 மாதமாக நிறுத்தி வைத்து இருப்பது இப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.