‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம்’ நூல் வெளியீட்டு விழா
![‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம்’ நூல் வெளியீட்டு விழா](https://tn96news.com/wp-content/uploads/2024/07/IMG-20240716-WA0280-850x487.jpg)
கோவில்பட்டி அங்கோ பிளாசாவில் ‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூா் ராஜூ எம். எல். ஏ தலைமை தாங்கினார்.
தேவா் வரலாற்று ஆய்வாளா் நவமணி, முன்னாள் தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநா் விஜயகுமாா், திரைப்பட தயாரிப்பாளா் சவுத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனர்,
முனைவர் கருத்தப்பாண்டி எழுதிய ‘தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம்’ என்ற நூலை திரைப்பட நடிகா் வேல.ராமமூா்த்தி வெளியிட, முதல் பிரதியை நெல்லை பசும்பொன் தேவா் முன்னேற்றக் கழகத் தலைவா் மூா்த்திதேவர் பெற்று கொண்டாா்.
விழாவில் தொழிலதிபா்கள் அங்கமுத்து, ராதாகிருஷ்ணன், பசும்பொன் தேவா் கல்வி அறக்கட்டளை நிறுவனா் பரமசிவம், திருவள்ளுவர் மன்ற செயலாளர் நம்.சீனிவாசன்,முனைவர் சம்பத்குமார், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவன தலைவர் செல்லத்துரை,கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் தலைவர் அசோக்குமார், செயலாளர் வேல்முருகன், அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி,
நகா்மன்ற உறுப்பினா் கவியரசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)