• May 20, 2024

Month: November 2023

செய்திகள்

திருப்பூா், கோவையில் ஜவுளி தொழில் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனா். இந்நிலையில், மின் கட்டண உயா்வு, நிலை கட்டணம், மூலப்பொருள்கள் விலை உயா்வு, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளதால் […]

தூத்துக்குடி

வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்திய ரூ.4 கோடி கொட்டைப்பாக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து வெவ்வேறு விதமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தோனேசியாவில் இருந்து 4 கன்டெய்னர்களில் கடந்த வாரம் பழைய துணிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர். அப்போது, பழைய துணிகள் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு உள்பகுதியில் கொட்டைப்பாக்கு […]

கோவில்பட்டி

குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை மாவட்டநிர்வாகம் சீர்செய்ய வேண்டும்; தே. மு. தி. க.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே. மு. தி. க.செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் கோவில்பட்டி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஒன்றியகழக செயலாளர்கள் நகரசெயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது         *அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தவேண்டும்                 *கன்னியாகுமாரி மாவட்டசெயலாளர் அமுதன் திருமணநிகழ்ச்சிக்கு 15.11.23 அன்று வருகதரும் கழகபொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த்துக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வறவேற்ப்பு அளிக்க தீர்மானம் […]

தூத்துக்குடி

உயர்கல்வி பயிலுவதற்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்; தூத்துக்குடியில் 17ம் தேதி நடக்கிறது

தூத்துக்குடி, வ.உ.சி கல்லூரியில் வருகிற 17ம் தேதி நடைபெற இருக்கும்  கல்வி கடன் முகாமின் முன்னேற்பாடாக தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி நிலையங்களின் பற்றாளர்கள் மற்றும் வங்கியாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் முதுநிலை நிதி ஆலோசகர் (ம) மாநில தொடர்பு அலுவலர் (கல்விக் கடன் மேளா) ஜெ.வணங்காமுடி முன்னிலையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கல்விக்கடன் பெறுவதற்கான முக்கிய அம்சங்கள் விண்ணப்பிக்க வேண்டிய செய்முறை வழிமுறைகள் கல்விக்கடன் பெறுவதில் ஏற்படும் சிரமங்கள் சந்தேகங்கள் இவற்றை […]

செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வைரஸ் காய்ச்சலுடன், இருமல் பாதிப்பும் உள்ளது. எனவே முதல்-அமைச்சர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் இவ்வாறு மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

செய்திகள்

பஸ்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து கீழே இறக்கிய நடிகை கைது;

பா,ஜனதா  கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகியாக  துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளார். இவர் நேற்று சென்னை குன்றத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர்  அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டை தாண்டியும் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டார். போக்குவரத்து நெரிசலில் நின்ற அந்த பஸ் டிரைவரிடம் வாக்குவாதம் செய்து படிக்கட்டில் பயணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தார்; அத்துடன் நிற்காமல் படிக்கட்டில் நின்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கினார்., பஸ்சின் […]

தூத்துக்குடி

காதல் தம்பதி வெட்டிகொலை: புதுப்பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடி முருகேசன் நகரில் வசித்து வரும் கோவில்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிச்செல்வம் (வயது 23), அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 3-வது நாளான . நேற்று முன்தினம்  (2.11.2023) மாலை 6.30 மணியளவில் முருகேசன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்தபோது அங்கு மறைந்திருந்த சிலர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது பற்றி அறிந்ததும்  சிப்காட் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட […]

தூத்துக்குடி

தூத்துக்குடி உள்பட 38 மாவட்ட தலைநகரங்களில் சுகாதார நடைபாதை திறப்பு  

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும்  தலைநகரங்களில்  நடப்போம் நலம் பெறுவோம்- என்ற பெயரில் 8 கி.மீ.தூர  சுகாதார நடைபாதை(ஹெல்த் வாக் சாலை) அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றின் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) ஒரே நேரத்தில் நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெல் ஹோட்டல் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இருந்து […]

செய்திகள்

இந்தியாவின் மிகப் பெரிய நன்கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம்

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஷிவ் நாடார் இந்தியாவின் மிகப் பெரிய நன்கொடையாளர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். தினமும் அவர் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி சாதனை படைத்து இருக்கிறார். “ஹுருன் இந்தியா” நிறுவனம் 2022 – 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அதன்படி இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இதில், ரூ.2042 கோடியை […]

செய்திகள்

அமைச்சர்  எ.வ.வேலு வீடு, கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன.இந்த கல்லூரிகள் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே எ.வ.வேலுவின் வீடு மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த நிலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 கல்வி நிறுவனங்கள், அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம் என 5 இடங்களிலும் இன்று வருமான […]