அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் (AABCS) என்ற பெயரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் தொடங்க கடன்/மானியம் வழங்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பற்றி தூத்துக்குடி தொழில் மைய பொதுமேலாளர் ஏ.சுவர்ணலதா விளக்கம் அளித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:- அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டத்தில் சுயதொழில் தொடங்க கடன்/மானியம் பெற தகுதி:- *ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும்.(தனி நபர்கள், உரிமையாளர் நிறுவனங்கள், பங்குதாரர் நிறுவனங்கள், […]
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் தொழிலாளர் நலவாரிய சங்கத்தினர் முதியோருக்கான மாத உதவித்தொகை 4 மாதமாக வழங்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர் நலவாரிய உருப்பினர்கள திரளாக கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- , கோவில்பட்டி தாலுகா தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தொழிலாளர் நல […]
இளையரசனேந்தலில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை நேற்று காலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷம் எழுப்பியவாறு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி தாலுகா செயலாளர் ஜி. பாபு தலைமை தாங்கினார். அப்போது இளையரசனேந்தல் கிராமத்திலுள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அந்த அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்கள் தாசில்தார் வசந்த மல்லிகாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், […]