Month: June 2023

கோவில்பட்டி

அஞ்சல் துறையின் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க அபராத தொகையில் 35 சதவீதம் விலக்கு

கோவில்பட்டி கோட்ட தபால் கண்காணிப்பாளர் எஸ். சுரேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய அஞ்சல் துறையின் மூலம் பொது மக்களுக்கு குறைந்த தவணை மற்றும் அதிக போனசுடன் கூடிய ஆயுள் காப்பீட்டு பாலிசி மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு சூழல்கள் காரணமாக பாலிசிகளை தொடங்கிய வாடிக்கையாளர்கள், தங்கள் தவணைத் தொகையை செலுத்த தவறி விடுவதால், அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகிறது. காலாவதியான பாலிசிகளை அபராததொகையுடன் தான் புதுப்பிக்க இயலும். அதிக […]

தூத்துக்குடி

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை கண்டிக்க வேண்டாம் ; பெற்றோர்களுக்கு காவல்

இளங்கலை  மருத்துவப் படிப்புகளில் சேர 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில்  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  மேலும்  அவர் கூறி இருப்பதாவது:- இத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகள் தோல்வியைக் கண்டு வருந்த வேண்டாம். தேர்வு மட்டுமே நமது வாழ்க்கையல்ல. தோல்வியை அடுத்த முறை வெற்றிக்கான படிக்கட்டாக மாற்றுங்கள். இந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களுடன் […]

கோவில்பட்டி

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கோடை  விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் கடந்த 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு  முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் தொடங்கப்பட்டன, கோவில்பட்டி காந்தி நகரில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நேற்று  பள்ளிக்கு வந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பென்சில், பேனா, ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை நகர் […]

செய்திகள்

எய்ம்ஸ் டாக்டர்கள் மூலம் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் ; டி.

அ.திமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார்சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிவருமாறு :- கோடி கோடியாய் கொள்ளையடித்து அதுவும் இந்த மதுபான விஷயங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை என்பது நாடே கை தட்டி அரசைப் பார்த்துச் சிரிக்கின்றது.மேலும் அரசைக் கண்டனம் செய்கின்ற இந்த வேளையில் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை என்பது அவர் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் கள்ளச் சாராய சாவுகள்,அதுபோல டாஸ்மாக் கடைகளில் அதனை ஒட்டியுள்ள பார் என்று சொன்னால் 6 […]

செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

அமலாக்க துறையினரால்  கைதாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிய 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமலாக்கத்துறை அமைத்தது இம்மருத்துவக்குழு தரும் அறிக்கையை வைத்து அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் […]

செய்திகள்

செந்தில்பாலாஜி வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி திடீர் விலகல்

மின்சார துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் […]

செய்திகள்

செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத ராஜேஷ், தப்பிக்க வழி இல்லாமல் […]

செய்திகள்

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை: காவேரி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்படுகிறார்

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை அரசு டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஓமந்தூரார், இ.எஸ்.ஐ. மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரையால் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற […]

செய்திகள்

மதுரை-போடி அகல ரெயில்பாதையில் விரைவு ரெயில் சோதனை ஓட்டம்

மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது. போடி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து தேனி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதுபோல், சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் […]

கோவில்பட்டி

தொழுநோய் ஊன தடுப்பு முகாம்

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழுநோய் ஊனத்தடுப்பு மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது,. உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் *தொழுநோய்) டாக்டர் யமுனா, ஊனத்தடுப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி நோயாளிகள்  விழிப்புணர்வு உரையாற்றினார், முகாமின்போது 19 பேருக்கு சிகிச்சை மற்றும் நல உதவிகள் வழங்கபட்டன, மேலும் இயற்கை சிகிச்சை மருத்துவர் திருமுருகன், சிகிச்சை உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பயனாளிகளுக்கு உணவு முறை […]