எய்ம்ஸ் டாக்டர்கள் மூலம் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் ; டி. ஜெயக்குமார் பேட்டி
![எய்ம்ஸ் டாக்டர்கள் மூலம் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் ; டி. ஜெயக்குமார் பேட்டி](https://tn96news.com/wp-content/uploads/2023/06/download-1-696x560.jpg)
அ.திமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார்சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிவருமாறு :-
கோடி கோடியாய் கொள்ளையடித்து அதுவும் இந்த மதுபான விஷயங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை என்பது நாடே கை தட்டி அரசைப் பார்த்துச் சிரிக்கின்றது.
மேலும் அரசைக் கண்டனம் செய்கின்ற இந்த வேளையில் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை என்பது அவர் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் கள்ளச் சாராய சாவுகள்,அதுபோல டாஸ்மாக் கடைகளில் அதனை ஒட்டியுள்ள பார் என்று சொன்னால் 6 ஆயிரம் கடைகள் உள்ள நிலையில் அதற்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகளில் சட்ட விரோதமான பார்களை நடத்தி அதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 கோடி ரூபாய்க்கு மேலே கொள்ளையடித்து,இன்னொரு நவீன முறையிலே மதுபான ஆலையில் உற்பத்தியாகும் சரக்குகள்,டாஸ்மார்க் மூலமாக சில்லறை வணிகத்திற்கு வரும்போது அதன் வரி வருவாய் அரசின் கருவூலத்திற்கு வரும்.
ஆனால் அரசின் கருவூலத்திற்கு வருவதற்குப் பதிலாக இந்த சட்ட விரோத பார்களிலே நேரடியாக பார்களுக்கு வரும்போது வாட் என்ற வரியும் எக்ஸ்சைஸ் வரியும் கிடையாது. எங்களுடைய ஆட்சிக் காலத்திலே குறிப்பிட்ட காலத்தில்தான் மதுவிற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 24 மணி நேரமும் மதுவிற்பனை செய்யப்படும் நிலைமைதான் இந்த விடியா அரசு இன்றைக்கு ஏற்படுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வராமல் செந்தில் பாலாஜி மூலமாக ஒரு குடும்பத்திற்கு மட்டும் போகக்கூடிய அளவுக்கு ஏற்பட்டு அதன் மூலம் அரசுக்கு வருவாய் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது.
எங்களுடைய ஆட்சிக் காலத்தில் பொதுவாக டாஸ்மாக்கை ஒட்டி பார் இருக்கும்போது அந்த டாஸ்டமாக் வருவாய் அடிப்படையிலே ஒன்றரை சதவீதம் பார் நடத்துபவர்கள் டிடி எடுத்துச் சரியாக அளித்துவிடுவார்கள். அந்த பணம் அரசின் கருவூலத்திற்கு வந்துவிடும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் டாஸ்மார்க் வருவாயிலிருந்து ஒன்றரை சதவீதம் டிடி எடுத்தது கிடையாது. மாறாக செந்தில் பாலாஜி ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருடைய ஆட்களை நியமித்து அதன் மூலம் மாதம் ரூ.50 கோடி அளவுக்கு அதுவும் ஒரு குடும்பத்திற்குச் செல்லவேண்டிய வகையில் வழி ஏற்படுத்தி இவர் அதில் கொள்ளை அடித்துள்ளார்.
ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய். அப்படி என்றால் ஒரு கடைக்கு மாதம் 50 ஆயிரம்,60 ஆயிரம் எங்கே செல்கிறது. யார் குடிக்கிறார்களே அவர்கள் தலைமீது தான் சுமத்துவோம் என்று சொல்லிவிட்டு அதன் அடிப்படையில் 10 ரூபாய் பாலாஜி என்று பெயர் வந்துவிட்டது. இந்த அளவுக்குக் கோடிக் கணக்கில் கொள்ளை அடித்து,அரசுக்கு வரவேண்டிய வருவாய் அனைத்தும் அதனைத் திருப்பி ஒரு குடும்பத்திற்குப் போகின்ற வகையில் செயல்பட்டதின் வகையிலே வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையில் சட்டப்படி தன்னுடைய கடமையைச் செய்துள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பதுபோல வகையாக இன்றைக்கு வருமானவரித்துறையிலும்,அமலாக்கதுறையிலும் இன்றைக்கு மாட்டிக்கொண்டுள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள் அல்லவா. அதுபோல நகையும்,சதையுமாக இருக்கின்ற ஸ்டாலின் இன்றைக்கு துடிதுடித்துபோயியுள்ளார். அண்ணாநகர் மோகன் வீட்டில் ரெய்டு செய்யும்போது ஏன் துடிக்கவில்லை. கார்த்திக் வீட்டில் ரெய்டு நடக்கும்போது ஏன் துடிக்கவில்லை.இன்றைக்குப் பல அளவுக்கு விஷயம் தெரிந்தவர்.அமலாக்கத் துறையில் மாட்டிவிட்டோம்.எப்படியாவது இதிலிருந்து தப்பிக்கவேண்டும் என்ற அடிப்படையிலே வருமானவரித்துறையும்,அமலாக்கத்துறையில் சட்டப்படி தன்னுடைய கடமையைச் செய்யவிடாமல் செய்துவருகிறார்.செந்தில் பாலாஜி நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றுதானே தெரிவித்தார்.
அவர்கள் கைது செய்தால் போகவேண்டியதுதானே. அமைச்சர் ரகுபதி செல்கிறார் மனித உரிமையை மீறியிருக்கிறார்கள் என்று சொல்கிறார். சென்னை மாநகராட்சி தேர்தலில் கள்ள ஒட்டு போட்டு,பூத்தை கைப்பற்றி,காவல்துறையை அடித்தவரைப் பிடித்துக் கொடுத்த காரணத்தினால் என் மீது 5 பிரிவுகளில் வழக்குத் தொடுத்தார்கள். 20 நாட்கள் நான் உள்ளே இருந்தேன். இதே இடத்தில் காவல்துறை இரவு வந்தது. நான் ஒத்துழைப்பு கொடுத்துச் சென்றேன் அல்லவா. ஆனால் அது விதி மீறல்தானே அது. என்னை மாத்திரை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கவில்லை. வேட்டி,சட்டையை மாற்றிக்கொள்ளவும் எனக்கு அனுமதிக்கவில்லை. கூச்சமில்லாமல் நீதிமன்றத்தில் நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்று சொன்னார்கள்.ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என்று தெரியாது. சென்னை சார்ந்தவன் நான்.சுமார் 2 மணி நேரம் சென்னையை எனக்குச் சுற்றிக் காண்பித்தார்கள். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இரவு 12 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறார்கள். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் இல்லையா.
கடமையைச் செய்யவந்தால் ஒத்துழைப்பு தரவேண்டியதுதானே. நேற்றுவரை வாக்கிங் செல்கிறார்.ஆரோக்கியமாக இருக்கிறார் அல்லவா. திடீரென எப்படி நெஞ்சு வலி வரும். வருமானவரித்துறையும்,அமலாக்கத்துறையும் வந்தால் நெஞ்சுவலி வந்துவிடுமா.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது யாருடைய ஆட்சி நடக்கிறது. ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது.இவர்கள் என்ன சொல்வார்கள்.அவருக்கு உடல்நிலை சரியில்லை.அனுப்ப முடியாது என்று சொல்வார்கள்.அதனால் வருமானவரித்துறையும்,அமலாக்கத்துறையும் எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு முழுமையான அளவுக்கு அவருடைய உடல் நிலையைப் பரிசோதனை செய்து உடனடியாக அதனைத் தெரிவித்து மேற்கொண்டு அவர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
காவல்துறையை எட்டி உதைத்துள்ளார்.நெஞ்சுவலி வந்தவர் எப்படி எட்டி உதைக்க முடியும். நெஞ்சுவலி வந்தால் கடமையைச் செய்ய வந்த காவல்துறை எட்டி உதைக்க முடியுமா.
எட்டி உதைக்க முடியாது. காவல்துறை எட்டி உதைக்கும்போதும் நடிப்பு. கஸ்டடியில் எடுக்கும்போது மட்டும் நெஞ்சுவலி. அவருடன் வந்த நாகராஜ் என்பவர் அவருடைய இதயத்தை அழுத்துகிறார். மருத்துவர் இதனைச் செய்யலாம். மருத்துவம் தெரியாத கட்சிக்காரர் எப்படிச் செய்யலாம். பல உண்மைகள் தெரிந்த காரணத்தினால் வேறு மாதிரி செய்வதற்கு முயற்சிகள் நடக்கின்றதோ என்றுதான் சிந்திக்க முடியும்.மருத்துவர் செய்யவேண்டிய வேலையை இவர் ஏன் செய்கிறார். இவர் வழக்கறிஞர்.இவர் ஏன் இதனைச் செய்கிறார். இதுபோல செய்யக்கூடாது.இதனால் வேறு மாதிரியாக விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கும். எங்கள் ஆட்சிக் காலத்தில் இதேபோல ஒரு சோதனை வந்தபோது ஸ்டாலின் வருமானவரித்துறை என்பது மத்திய அரசினுடைய வருகிறது.அதற்கு என்று தனி அதிகாரிகள்,தனி செட்டப் இருக்கின்றது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அந்த அடிப்படையில்தான் தலைமைச் செயலகத்திலும் இப்படி ஆதாரம் இருந்த காரணத்தினால்தான் சோதனை நடந்திருப்பதாகச் செய்தியும் வந்துகொண்டுள்ளது. என்னைச் சந்தித்து பேட்டி கேட்கிறீர்கள் இல்லையா.சம்பந்தப்பட்டவரைச் சென்று கேளுங்கள்.கோட்டையில்தான் முதலமைச்சர் இருப்பார்.அல்லது வீட்டில் இருப்பார்.தயவு செய்து அவரிடத்தில் விளக்கங்களைக் கேட்டு நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் அந்த உபயோகமான காரியத்தை ஊடகத்துறையினர் செய்தால் நான் நன்றி உடையவனாக என்றைக்கும் இருப்பேன் என்று தெரிவித்தார்.
இதனைத்தான் நாங்கள் இப்போது கேட்கிறோம்.தனக்கு வந்தால் மட்டும் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது என்று அப்போது ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தியபோது தமிழகமே தலைகுனிந்துவிட்டது. இப்போது என்ன தலை நிமிந்துவிட்டதா இந்த விடியா ஆட்சிக்கு. எப்படிப்பட்ட பேச்சைப் பேசுகிறார் பாருங்கள். சந்தர்ப்பவாத பேச்சு.
ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்யவேண்டிய ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அப்போது ஸ்டாலின் தெரிவித்தார்.
இப்போது அவர் உடனடியாக என்ன செய்யவேண்டும். உண்மையில் செந்தில் பாலாஜியுடன் தொடர்பு இல்லை என்றால் கண்டிப்பாக அவரை பதவிநீக்கம் செய்யவேண்டுமல்லவா. இதனைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏன் அவரை பதவிநீக்கம் செய்யாமல் அமைச்சர்களை அனுப்புகிறீர்கள். ஐ.சி. யு.வில் உள்ளவர்களை பொதுவாக யாரும் பார்க்க முடியாது. அதுவும் அமலாக்கத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ளவர். குற்றவாளியை அமைச்சர் சந்திக்கலாமா. முதலமைச்சரும் சென்று சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அமலாக்கத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ளவரை முதலமைச்சர் சென்று பார்ப்பது என்பது சட்டத்தை மீறும் செயலாகத்தான் கருத முடியும்.இதில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு அவரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக எடுக்கவேண்டும். எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு சோதிக்கவேண்டும்.ஆனால் அவர் நடவடிக்கை பார்க்கும்போது நன்றாக இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.எட்டி உதைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கிறார். அந்த நேரத்தில் திடீரென நெஞ்சுவலி வரும். அரசின் கட்டுப்பாட்டில் மருத்துவர்கள் இருக்கும் நிலையிலே மருத்துவர்கள் அரசுக்கு உதவுகின்ற வகையிலே அவர்கள் உடந்தையாக இருந்தால் சட்டப்படி அவர்கள் பதில் சொல்லவேண்டிய நிலை ஏற்படும். விருப்பு,வெறுப்பின்றி மருத்துவர்கள் செயல்படவேண்டும். பழனிவேல தியாகராஜன் பேசிய ஆடியோ.அதனை வெட்டி,,ஒட்டி விட்டார்கள் என்றுதான் குறிப்பிட்டார்.அப்படி என்றால் பேசியது உண்மை என்றுதானே அர்த்தம். இலாகா மாற்றியதன் மூலம் தவற்றை ஒத்துக்கொண்டார்கள். அந்த 30 கோடி ரூபாய் குறித்து இன்றைக்குத் தீவிரமான விசாரணை செய்து அதன் தொடர்ச்சியாக மதுபான விஷயங்களில் கோடி கணக்கான ரூபாய் கொள்ளையடித்து அதன் மூலம் பணப்பரிமாற்றம் நடந்திருக்கும் நிலையிலே இன்றைக்கு மத்திய அமலாக்கத்துறை தன்னுடைய கடமையைச் செய்துவருகிறது.
இதற்காக ஏன் ஸ்டாலின் துடிக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி,ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு இன்றைக்கு அவரின் அமைச்சரவையிலே அமைச்சராக இருக்கிறார் செந்தில் பாலாஜி. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 2 மாதத்தில் மோசடி வழக்கை முடிக்கவேண்டும் என்ற அடிப்படையில் அந்த நடவடிக்கையும் நடைபெற்றுவருகிறது. காவல்துறையை எட்டி உதைத்த செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.2015 ஆம் ஆண்டு மோசடி செய்கிறார். அமைச்சராக இருந்துகொண்டு துறை மூலமாகக் குற்றச்சாட்டு எழும்போது நீங்கள் கேட்பது நியாயம்.அவர் தனிப்பட்ட முறையில் நான் வேலைவாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டுப் பல பேரிடம் மோசடி செய்வது என்பது வேறு.
தனி நபர் செந்தில் பாலாஜி மோசடி செய்வதற்கும் அது எப்படி அமைச்சரவை எப்படிப் பொறுப்பாக இருக்க முடியும்.அதனால்தான் அம்மா நீக்கினார். நடவடிக்கை எடுத்தார். 2018 ல் எடப்பாடியார் ஆட்சி காலத்தில்தானே அவர் மீது வழக்குப் போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக்கத்தானே உச்சநீதிமன்றம் இன்றைக்கு 2 மாதத்தில் வழக்கை முடித்து அறிக்கை அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. திசை திருப்பும் வேலையைத்தான் திமுக இன்றைக்குச் செய்துவருகிறது.கைது செய்யட்டும்.நாங்கள் நீதிமன்றத்தில் சந்தித்துக்கொள்கிறோம் என்று யாராவது சொல்கிறார்களா.
மடியில் கனம் இருக்கிறது.அதனால் வழியில் உங்களுக்குப் பயம் இருக்கு. இத்தைதான் உங்களுடைய செயல்பாடு காட்டிக்கொண்டுள்ளது. சட்டப்படி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும்போது இது எப்படி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்.சீமான் திடீரென காலையில் எழுந்து செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறார்.
கள்ள ஒட்டு போட்டவரை நான் பிடித்துக் கொடுத்த காரணத்தினால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது சீமான் பேசினாரா. ஜனநாயக விரோத செயல் நடக்கிறது அதற்குச் சீமான் பேசவில்லை. செந்தில் பாலாஜி எப்படி என்று உலகத்திற்கே தெரியும்.அவருக்குச் சீமான் சான்றிதழ் அளிக்கிறார். எங்கள் ஆட்சியில் இதுபோன்று நடவடிக்கை எடுக்கும்போது எப்போதாவது சீமான் பேசியிருப்பாரா.இப்போது ஏன் வாய் திறந்துள்ளார்.ஊழலுக்குத் துணைபோகின்ற வகையில்தான் அவரின் செயல்பாடு உள்ளது.
கைது குறித்து அஞ்சாமல் நீதிமன்றத்தில் இந்த வழக்கைச் சந்திக்கவேண்டியதுதானே.இதற்கு எதற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)