• May 20, 2024

Month: September 2022

தூத்துக்குடி

மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவி: கனிமொழியிடம் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்து பெற்றனர்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.அமைச்சர் கீதாஜீவன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மற்றும் ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதே போல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். […]

செய்திகள்

பா.ஜனதா அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: அண்ணாமலை கண்டனம்

கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அப்பகுதியில் உள்ள பா,ஜனதா கட்சி அலுவலம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பா.ஜனதா அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனரஇந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கோவை ஒப்பனக்காரவீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் […]

செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி’; ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 12-ம் தேதி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22-ம் தேதி முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஜி.கே.வாசன்; தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை பட்டியலிட்டார்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவில்பட்டி வந்தார். ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார்கள். அதை உங்கள் மத்தியில் தெரிவிக்கிறேன். பயிர் காப்பீடு திட்டத்தில் சில பயிர்கள் அமல்படுத்தவில்லை என்ற குறை விவாயிகள் மத்தியில் இருக்கிறது. எனவே விடுபட்ட பயிர்களுக்கு வேளாண்மை இன்சூரன்சு கிடைக்ககூடிய வகையில் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்ய […]

செய்திகள்

தனியார் நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி மிரட்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.- வைரலாகும் வீடியோ

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தை் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இதனிடையே பூஜாகோயல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் குத்தகை காலம் முடிவடையாததால் தங்களால் வெளியேற முடியாது என திட்டவட்டமாக கூறி வந்தனர். இது தொடர்பாக 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]

சினிமா

அஜித்தின் 61-வது படம் `துணிவு’ செகண்ட் லுக் வெளியீடு

நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ என படக்குழு தலைப்பிட்டுள்ளது . ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ‘ ஏகே 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.அத்துடன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று […]

சினிமா

இந்தியன்-2 படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.பின்னர் ஒரு சில காரணங்களால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.அதன்படி ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் இன்று கமல்ஹாசன் கலந்துகொண்டார்.படப்பிடிப்பு தளத்தில் […]

செய்திகள்

ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.இந்த நிலையில், தி.மு.க. எம்.பி.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ஒரு கோடி பரிசளிக்கப்படும் என முகநூலில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் இந்து மக்கள் புரட்சி படையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் முகநூலில், திமுக எம்.பி ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரது நாக்கை அறுத்து […]

செய்திகள்

தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தி.மு.க.உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் 3 பேர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இந்த பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்கென உள்ள படிவத்தில் […]

செய்திகள்

புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல தடை

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு திண்டுக்கல், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து நீராடிவிட்டு செல்வது வழக்கம்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும்போது புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் விழும். கடந்த மாதம் 3-ந்தேதி நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் விழுந்தது. அந்த சமயத்தில் தாண்டிக்குடியில் தனியார் எஸ்டேட்டில் வேலைபார்த்த பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் தனது நண்பருடன் அங்கு நீராட சென்றார்.அப்போது ஆபத்தை உணராமல் […]