• May 16, 2024

Month: July 2022

கோவில்பட்டி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா நிர்வாகிகள் தேர்வு

கோவில்பட்டி நகர பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பதக்கங்களுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. கோவில்பட்டி பாரதி இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ரங்கராஜன், சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைத் தலைவர் தெய்வேந்திரன், பேராசிரியர் சுரேஷ் பாண்டி ஆகியோர் சிறப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வட்டார அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 210 மாணவ. மாணவிகளுக்கு பாராட்டு

கோவில்பட்டி வட்டார அளவில் 2022 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 210மாணவ. மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி பைரவா மகாலில் நடைபெற்றது. கோவில்பட்டி இலக்கிய உலா, அபிராமி அசோசியேட்ஜெய்கிறிஸ்ட் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழா அபிராமி முருகன் தலைமை தாங்கினார். புனித ஓம் கல்வி நிறுவனங்கள்நிறுவனர் லெட்சுமணப் பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் தமிழரசன் ரோட்டரி கிளப் மேனாள் ஆளுநர் விநாயகா ரமேஷ், ஆசியாபார்ம்ஸ் பாபு, ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம், மைக்ரோபாய்ண்ட் ஆர்ம்ஸ்ட்ராங், […]

பொது தகவல்கள்

சாதம் வடித்த கஞ்சி- சத்துக்கள் ஏராளம் …

சோறு வடித்த கஞ்சியை பருகும் வழக்கம் முன்பு நம்மிடையே இருந்தது. ஆனால், குக்கர் கலாசாரத்துக்கு மாறிய பின்னர் அதை மறந்தே போய்விட்டோம்.வடிகஞ்சியில் நிறைந்துள்ள சத்துக்களை தெரிந்துகொண்டால் மீண்டும் அந்த பழக்கத்தை நாம் தொடர்வோம் என்பதற்காகவே இந்த தகவல்கள்…சோறு வடித்த கஞ்சியை சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் பருகலாம். காய்ச்சல் நேரத்திலும் நோய்வாய்ப்பாட்டவர்களும்,உணவை உட்கொள்ள சிரமம் உள்ளவர்களும், முதியவர்களும் அருந்த வேண்டிய ஒன்றாகும். நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி.சி.இ. மேலும் நம்மை வெளியிலிருந்து காக்கக் கூடிய மூலக்கூறான […]

ஆன்மிகம்

27 தலைமுறை பாவங்கள் ,தோஷம் நீக்கும் காட்டுராமர் கோவில்

திருநெல்வேலி சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமிட்டார் தூரத்திலும் உள்ளது அருகன்குளம். இந்த கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது. ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, […]

செய்திகள்

திருச்சி-இலங்கை விமான போக்குவரத்து குறைப்பு; கார்கோ சேவை ரத்து

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. முதலில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில் பின்னர் தினசரி 2 சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.அந்த வகையில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கைக்கு காலை 10:30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோன்று மதியம் 2:30 […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தற்கொலை போராட்டம்: வக்கீல் உள்பட சிலர் கைது

கோவில்பட்டி பகுதியில் கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்களால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், விருதுநகரை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் தனது மனைவி பெயரில் கந்து வட்டி கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து கந்துவட்டிக்கு தீர்வு காணக்கோரி காங்கிரஸ் கட்சியை சர்ந்த வக்கீல் அய்யலுசாமி இன்று தற்கொலை போராட்டம் அறிவித்து இருந்தார்.இந்த போராட்டம் இன்று காலை 11 மணிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் என்றும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி என்பவர் தற்கொலை செய்வார் என்றும் […]

செய்திகள்

கள்ளக்காதலால் விபரீதம்:காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்ற மருமகள்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58). இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார். இதனால் எழுமலை மனைவி அம்சா (வயது 31) , தனது 10 மாத குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜ் இரவு பணிக்கு […]

சிறுகதை

மார்க்கெட்டில் மாறுவேடம்…(சிறுகதை)

நகரின் பெரிய மார்க்கெட்… கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒரே இரைச்சல்… காய்கறிகள் வேனில் வந்து இறங்கி கொண்டிருந்தன.அந்த மார்க்கெட்டின் வெளியே ஓரத்தில் காரை நிறுத்தினார் சாம்பசிவம். பெரும் பணக்காரர். ஆனால் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். பணக்காரர்கள் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து செல்வார். கையில் மோதிரம் கழுத்தில் தங்க சங்கிலி என்று பளபளப்பாக காட்சி தருவார். மற்ற இடங்களில் எளிமையாக இருப்பார். ஏன் என்றால் யாரும் பணம் கேட்டுவிடக்கூடாது என்ற முன் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிரடி சோதனை: 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், பாலித்தீன் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு தமிழகத்தில் ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் எந்த தடிமன் வரையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்பதில் குழப்பம் இருப்பதால் பல கடைகள், வணிக நிறுவனங்களில் பாலீத்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் ஜூலை 1-ம் தேதி முதல் முழுமையாக தடை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 30 தற்காலிக கடைகள் அகற்றம்; கூரை ஆக்கிரமிப்புகளை அகற்ற

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த பஸ் நிலையம் பயணிகளின் வசதி பற்றி கண்டுகொள்ளாமல் வியாபார கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி வருமானத்துக்கு வழிவகுத்து உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.வணிக வளாகம் போல் நிறைய கடைகள், அலுவலகங்கள், கிளினிக்குகள் பஸ் நிலைய வளாகத்தில் உள்ளன. இது தவிர தற்காலிக கடைகள் பெருகி காணப்பட்டன.இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நிறுத்துவதற்கு கூட இடம் கிடைக்காது. இதனால் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்களை […]