தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சில வணிகர்கள் வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும்; நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களைக் கள்ளச்சந்தையில் நமது மாவட்டத்தில் விற்பனை செய்கின்றனர். இப்பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல துறைகளின் ஒருங்கிணைப்புக் கூட்;டம் மாவட்ட ஆட்சியர்; தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பின்வரும் அறிவுரைகளை வழங்கினார். உணவு வணிகரிடத்திலும், உணவு வணிகரல்லாத இதர வணிகரிடத்திலும் […]
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டித் தேர்வு ஆர்வலர்கள் டி.என்..பி.எஸ்.சி. குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வினை எளிமையாக எதிர்கொள்ள மாநில அளவிலான 3 இலவச முழு மாதிரித் தேர்வுகள் நடத்திட திட்டமிட்டுள்ளது. இரண்டு மாதிரி தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது. மூன்றாவது மாதிரி தேர்வு நாளை (6.9.2024) வெள்ளிகிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறும் இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி இதில் […]
தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- .தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது = வெள்ளிக்கிழமைக ளில் மாதாந்திர தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2024 செப்டம்பர் மாதத்திற்குரிய வேலைவாய்ப்பு முகாம் வருகிற வெள்ளிக்கிழமை 13.9.2024 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்துறை நிறுவனங்கள் கட்டாயம் தனியார்துறை வேலை இணையத்தில். […]
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம்தேதி முதல் தூத்துக்குடியில் உள்ள புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து, டிரக், கனரக வாகனங்களுக்கு கட்டணம் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மீது குற்றவியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும், பாதி்க்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருந்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையை ஏற்ற தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது என்றும், […]
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் ஆக்கி விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். வீரர்களுக்கு ஆக்கி = மட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் கூறியதாவது:- இந்த போட்டியில் 4 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் அணிகள் தனிதனியாகப் போட்டியிடபோகிறீர்கள். ஆக்கி நமது நாட்டினுடைய தேசிய விளையாட்டு அந்த ஆக்கி விளையாட்டில் நமது நாட்டிற்கு இந்த ஆண்டு ஒரு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் ஆக்கியென்றால் இந்தியாதான் […]
`உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் நேற்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் நட்டாத்தி ஊராட்சி நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். நட்டாத்தி ஊராட்சி கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார் பெருங்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி உண்டியலூர் வடக்கு […]
ஒவ்வொரு ஆண்டும் ‘பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண்குழந்தைகளும் 18 வயது வரை கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்புரிந்த 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 அன்று பாராட்டுப் பத்திரமும், ரூ 1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு […]
பாலக்காடு- நெல்லை இடையே இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் தூத்துக்குடி வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த ரெயிலில் தற்போது மூன்றடுக்கு 5 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 11 பொது பெட்டிகளும், 2 சரக்கு பெட்டிகளும் என 18 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நீண்டதூர விரைவு ரெயில் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தேர்க்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி. இவர் சாத்தான்குளம் தாலுகா கருங்கடல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கருப்பசாமியும், அவருடைய உறவினர் சொல்விளங்கும் பெருமாளும் நெல்லைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பினர். மணல்விளை பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் கருப்பசாமி, சொல்விளங்கும் பெருமாள் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனே லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020
![](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-1024x768.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-1-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-1-1024x819.png)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-1024x443.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2023/03/Tn-96-2-6-1024x819.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/e712bb29-b77e-414a-862c-6703fdcc9943-2-1024x768.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/12/Screenshot-28-2-1024x819.png)