நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.உத்தரவு

 நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்; தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த ஒருவர் கோர்ட்டு வாசலில் வெட்டிகொலை செய்யபப்ட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய இந்த கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர், ஏற்கனவே நடந்த ஒரு கொலைக்கு பழி வாங்கும் வகையில் இந்த  கொலை சம்பவம் நடந்துள்ளது,.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகங்களில்  காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்/பி._. ஆல்பர்ட் ஜான் நேற்று ஆய்வு செய்தார்,. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பினை மேம்படுத்துமாறு உத்தரவு.பிறப்பித்தார்.

அதன்படி நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு வருபவர்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களை கட்டாயமான முறையில் சோதனை செய்ய வேண்டும்

நீதிமன்றத்திற்குள் தேவையில்லாமல் யாரும் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கு வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார்  கண்டிப்பாக துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று ஆல்பர்ட் ஜஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

,நீதிமன்றத்திற்கு முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்க கூடாது , அவ்வப்போது நீதிமன்றத்தின் உள்ளேயும் சென்று  சந்தேகத்திற்கிடமான முறையில் யாரும்  இருக்கின்றனரா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மேலும்  நீதிமன்ற வளாகங்களின் பின்புறமும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணியினை மேம்படுத்த வேண்டும். வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கும் காவல்துறையினரும் (BDDS) நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து நேற்றே போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *