மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
![மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது](https://tn96news.com/wp-content/uploads/2022/08/849914-untitled-6.webp)
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மதுரை ரெயில்வே நிலையம் வந்தது. பின்னர் மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள என்ஜினை மாற்றும் பணியின் போது திடீரென என்ஜின் தடம்புரண்டது.
இதனையடுத்து ரெயில்வே பணியாளர்கள் விரைவாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இது குறித்து அருகே உள்ள ரெயில் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு மதுரை வந்த மற்ற ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஊழியர்களின் துரித நடவடிக்கையால் என்ஜின் சரிசெய்யப்பட்டு 45 நிமிடம் தாமதமாக பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.
இதனால் மற்ற ரெயில்களும் தாமதமாக வந்து,சென்றன. இதன் காரணமாக ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது ரெயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கியுள்ளது. ரெயில் என்ஜின் தடம் புரண்டது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)