கோவில்பட்டியில் கனமழை; சாலைகளில் ஆறுபோல் ஓடிய தண்ணீர்
கோவில்பட்டியில் இன்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நகர்புறம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
கனமழை காரணமாக நகரில் அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறு போல் ஓடியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். புதுரோடு-மெயின்ரோடு சந்திப்பில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இளையரசனேந்தல் ரோட்டில் ரெயில்வே சுரங்க பாலத்தில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியது. வாகனங்கள், பொதுமக்கள் உள்ளே சென்று விடக்கூடாது என்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து, கிராம உதவியாளர் ராமமூர்த்தி, ரெயில்வே துறை ஊழியர் கண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் கொட்டும் மழையிள் நனைந்தபடி அங்கு நின்று வாகனங்கள் மற்றும் பொதுமக்களை திருப்பி அனுப்பினர்.