கோவில்பட்டியில் அப்துல்கலாம் நினைவு தினம்
![கோவில்பட்டியில் அப்துல்கலாம் நினைவு தினம்](https://tn96news.com/wp-content/uploads/2022/07/179c5c43-796c-44ab-9041-a67d833b8d69-1-850x442.jpg)
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் சார்பில், அதன் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஜீவ அனுகிரகா பசுமை இயக்கம் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார் . ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் 100 பேருக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர், கோவில்பட்டி கடலையூர் சாலையில், வாகை, புங்கை, நாவல், மகிழை உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், ஜீவ அனுகிரக பசுமை இயக்க நிர்வாகிகள் பாபு, ராமர், பாலசுப்பிரமணியன், தங்க மாரியப்பன், செந்தில் குமார், நல்லதம்பி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)