• May 19, 2024

கோவில்பட்டி பஸ் நிலையங்களை இணைக்கும் சர்க்குலர் பஸ்கள்; பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்

 கோவில்பட்டி பஸ் நிலையங்களை இணைக்கும் சர்க்குலர் பஸ்கள்; பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்

கோவில்பட்டி நகருக்குள் நெருக்கடியை தவிர்க்கும் வைகையில் பைபாஸ் சாலையில் புதிதாக கூடுதல் பஸ் நிலையம் திறக்கபட்டது, ஆனால் அந்த பஸ் நிலையம் தொடர்ந்து இயங்கவில்லை. தற்போது பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் செல்வதில்லை. பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடாமாக மாறிவிட்டது,

வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையம் வெளியே நிறுத்தி பயணிகள் ஏற்றியும் இறக்கியும் செல்கிறார்கள். நள்ளிரவு நேரங்களில் சர்வீஸ் சாலையில் உள்ள பஸ் நிலையம் அருகில் வருவது கிடையாது. பாலத்தின் கீழ்புறத்தில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்து பயணிகளை இறக்கி செல்வது உண்டு. பயணிகள் தட்டு தடுமாறி சர்வீஸ் சாலைக்கு வந்து ஆட்டோவை பிடிக்கவேண்டிய பரிதாப நிலை தான் தற்போது நிலவுகிறது.
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து நகருக்குள் இருக்கும் பழைய பஸ் நிலையத்தை இணைக்கும் சர்க்குலர் பஸ்கள் இரவு நேரங்களில் இயக்கப்படும், மேலும் நீண்ட தூர பஸ்கள் இரண்டு பஸ் நிலையங்களுக்கும் செல்லும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்து இருந்தார். பலமாதமாகியும் இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வரவில்லை.
எனவே சர்க்குலர் பஸ்கள் இயக்க கோரியும், கோவில்பட்டி நகரில் இயக்குப்படும் சிற்றுந்துகள் (மினிபஸ்) அரசு விதித்த குறைந்த பட்ச கட்டணமான ரூ. 5 க்கு பதில் ரூ.10 வசூலிக்கிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் அரசு விதித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பயணிகளிடம் வாங்கும் கையெழுத்து படிவங்களை கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் ஜூன் 1 ந் தேதி வழங்குவது என்று கோவில்பட்டி வட்ட அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பின் பொறுப்பாளர்கள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *