கலச விளக்கு வேள்வி பூஜை; செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு
![கலச விளக்கு வேள்வி பூஜை; செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/05/cacheShareImage-1-850x560.jpg)
கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் வேண்டி நடந்த இந்த வழிபாட்டில் செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சக்தி கொடியை மாவட்ட துணைத்தலைவர் பண்டார முருகன் ஏற்றிவைத்தார். ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன் கருவறையில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் விளக்கேற்றினார். கலச விளக்குவேள்வி பூஜையை மாவட்ட மகளிர் அணி தலைவி கே.பத்மாவதி, அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா ஆகியோர் தீபம் ஏற்றி தொடக்கி வைத்தனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)