அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
தூத்துக்குடி ️தருவைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமருதூர் பகுதியை சேர்ந்த பொய்யாழி மகன் போஸ் (வயது 28) என்பவருக்கும் வேடநத்தம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் (26) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாரிராஜ் மற்றும் அவரது நண்பரான வேடநத்தம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மகன் கார்த்திக் (24) ஆகிய 2 பேரும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் போஸ் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போஸ் அளித்த புகாரின் பேரில் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம் வழக்குபதிவு செய்து மாரிராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து அரிவாள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.