• April 3, 2025

மருந்து செலவு இல்லாத “மருந்து குழம்பு”

 மருந்து செலவு இல்லாத “மருந்து குழம்பு”

மருந்து செலவு இல்லாத “மருந்து குழம்பு” வாரம் ஒருமுறை இந்த குழம்பு வைத்து சாப்பிட்டு  வந்தால்…வாயு,கை கால் குடைச்சல், கெட்ட கொழுப்பு, வயிறு மந்தம், வயிறு மக்கு, காற்று பிரியும்பொழுகு துர்நாற்றம் வீசுதல்,

வயிறு ஊதல், பசியின்மை, நெஞ்சு சளி போன்றவை குணமாகும்.

வாரம் தோறும் சாப்பிட வயிறு மற்றும் உடல் சுத்தமாகி நரம்புகள் முறுக்கேறும். இது நமது பாரம்பரியமான குழம்பு. குழந்தை பெற்று எடுத்தவர்கள் உண்ண பழைய தெம்பு பெலன் கிடைக்கும் .

மருந்து குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

சுக்கு – இரண்டு துண்டு அதிமதுரம் – 2 துண்டு, திப்பிலி – சிறிதளவு, சித்தரத்தை – 2 துண்டு, மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தனியா – 3 டீஸ்பூன்,

தாளிப்பு பொருள்கள்: சாம்பார் வெங்காயம் – 10 பூண்டு – 25 பல், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, புளி -எலுமிச்சை அளவு, தக்காளி – மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு நல்லெண்ணெய் – தேவையான அளவு,

மேற்கண்ட மூலிகைகள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். எதையும் பொடியாக வாங்காமல் அப்படியே வாங்கி பயன் படுத்துவதுதான் நல்லது.

வாணலியில் எண்ணெய்விடாமல் சுக்கு, அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை அனைத்தையும் தனித்தனியாக இலேசாக வறுக்கவும்.அதை மிக்ஸியில் பொடியாக அரைக்க வேண்டும். இதை தனியாக வைத்து கொள்ளுங்கள். தனியா, சீரகம், மிளகு மூன்றையும் வறுத்து பொடிக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் 4 ஸ்பூன் விட்டு கடுகு சோம்பு உளுந்து சாம்பார் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து கரைத்து வைத்திருக்கும் புளியை சேர்க்கவும். கரைசல் நன்றாக கொதிக்க வைக்கவும். புளிவாசனை போக கொதிக்க வைத்ததும்,      மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் பொடி அனைத்தையும் தூவி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இறக்கவும்.

சுக்குவின் மணம் மணக்க மணக்க குழம்பு தயார். மருந்துபொருள்கள் சேர்த்ததால் மணம் இல்லாமல் ருசி இல்லாமல் இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். வெகு ருசியாக இருக்கும். அதிலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு  கன ருசியும் தொண்டையில் காரமும் தெரியும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *