சொந்த உபயோக கார்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்து அலுவலரிடம் ஓட்டுநர் சங்கம் மனு

கோவில்பட்டி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் , தமிழ் பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் வினோத் செல்வின் உள்ளிட்டோர் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்தப் பயன்பாட்டுக் கார்களை பலர் வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்களிலும் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதால் அரசுக்கு அதிக வரி இழப்பு ஏற்படுகிறது. எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..சொந்த உபயோக வாகனம் வாடகைக்கு பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டால் வாகன பதிவு எண்ணை ரத்து செய்ய வேண்டும்.
நாங்கள் வாடகை வாகனத்துக்கு முறையாக தகுதி சான்றிதழ், காப்பீடு, வாகன உரிமம் இவை அனைத்தும் எடுத்து வருகிறோம். எங்களைப் போன்று உள்ளவர்கள் தொழில் செய்வதற்கு மிகவும் இடையூறாக சொந்த பயன்பாட்டு வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.
சிறு ரக சரக்கு வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதம் அதிக அளவில் விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனங்களை முறையாக சோதனை செய்து முறைப்படுத்த வேண்டும். வணிக ரீதியாக பயன்படுத்தும் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விடுகிரவர்களை கண்காணித்து சோதனை செய்ய வேண்டும்,
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
