கோவில்பட்டியில் நடந்த திறன் சார்ந்த போட்டிகளில் ‘சாம்பியன்’:சாத்தூர் கல்லூரிக்கு சுழற்கோப்பை பரிசு

கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி (சுயநிதிபாடப்பிரிவுகள்) வணிகவியல் (வணிக பகுப்பாய்வு) துறை சார்பாக மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான திறன் சார்ந்த போட்டிகள் (TALENT TITANS-2K25) என்ற தலைப்பில் நடைபெற்றது.
.கல்லூரி முதல்வர். சுப்புலட்சுமி வழிகாட்டுதலின்படி கல்லூரி இயக்குநர் கு.வெங்கடாசலபதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.
மூன்றாம் ஆண்டு மாணவி மாரியம்மாள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி வழக்கறிஞர் ஜெயஸ்ரீகிறிஸ்டோபர் , தொழிலதிபர் கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒட்டு மொத்தமாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரி மாணவ மாணவிகள் `சாம்பியன்’ பட்டத்தை தட்டி சென்றனர். இந்த கல்லூரிக்கு சுழற்கோப்பை பரிசளிக்கப்பட்டது.,
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர். முத்துலட்சுமி ஆலோசனைப்படி துறைப்பேராசிரியர்கள் ஷாகிரா பானு, சரவணன் செல்வ நந்தினி வழிகாட்டுதலின்படி வணிகவியல் (வணிக பகுப்பாய்வு) துறை மாணவ மாணவிகள் செய்திருந்தனர். விழா தொடக்கத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் வெல்டன் பிரபு வரவேற்று பேசினார்.
