கோவில்பட்டி கல்லூரியில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை


தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளையோர் இலக்கியப் பயிற்சிப்பாசறை நடந்தது.
தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடம் தமிழ் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்திடும் வகையில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமிநாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இளையோர் இலக்கிய பயிற்சிப்பாசறை நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.
கல்லூரி செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.தமிழ் வளர்ச்சித்துறை மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நெல்லை ஜெயந்தா நோக்கவுரையாற்றினர்.

`தமிழின் அருமை தமிழர் பெருமை’ எனும் தலைப்பில் பேராசிரியர் அப்துல் சம்மது, `கை நிறைய கவிதைகள்’ தலைப்பில் நெல்லை ஜெயந்தா, `மனம் மனமறிய ஆவல்’ தலைப்பில் பணி நிறைவு பெற்ற சுகாதாரத்துறை அலுவலர் லதாபிரீட்டாஜான், சீரிளமைத் திறம் வியப்போம்’ என்ற தலைப்பில் உதவிப்பேராசிரியர் ராஜபிரியங்கா, `உணவுகளும் கனவுகளும்’ என்ற தலைப்பில் சித்த மருத்துவர் செல்வராணி, `உச்சம் தொட்ட தமிழர்’ தலைப்பில் ஆசிரியர் சங்கர்ராமன், ஆகியோர் பேசினர்,
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் அருண், மகிழ்வோர் மன்ற நிர்வாகிகள் ஜான்கணேஷ், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், கம்பன் கழக செயலாளர் சரவணச் செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செல்வம் நன்றி கூறினார்.

