கீழஈரால் தொன் போஸ்கோ கலைக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கூட்டம்
கோவில்பட்டி அருகே கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் கூட்டம் நடைபெற்றது, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பீட்டர் ஆரோக்கியராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் பிரபு முன்னிலை வகித்தார்கள். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பவுன்ராஜ் வரவேற்று பேசினார்.
.சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற முன்னாள் மாணவர் கவுரவிக்கப்பட்டனர், தூத்துக்குடி மாவட்ட புகையிலை கட்டுப்பாடு குழு சமூக ஆர்வலர் ரொசாரி பாத்திமாவுக்கு முன்னாள் மாணவர் சங்கப் பொறுப்பாசிரியர் முனைவர் சிவசங்கரி பொன்னாடையும், சிறப்புப் பரிசினையும் வழங்கினார்.
திருநெல்வேலி IDFC முதல் வங்கி உதவி விற்பனை மேலாளர் பாலமுருகன், திருச்சி சலேசிய முன்னாள் மாணவர் சங்கம் பொறுப்பாளர் அருட்தந்தை ஹென்றி டோமினிக் , கல்லூரி செயலர் ராஜதேவன் பொன்னாடை அணிவித்து சிறப்புப் பரிசு வழங்கினார்.
தொன் போஸ்கோ முன்னாள் மாணவர் இந்திய தேசிய அமைப்பு பதிவு பெற்ற சான்றிதழினைக் கல்லூரி செயலர் ராஜதேவனிடம் அருட்தந்தை திவ்விய அலெக்ஸாண்டர் வழங்கினார்..
சங்க பொறுப்பாளர்கள் பவுன்ராஜ், ஜோஸ்ருதி, அலெக்ஸ் மிக்கேல்ராஜ் ,கீர்த்தனா, ரமா, அற்புதராஜ் ஆகியோர் உதவித்தொகையை கல்லூரி செயலரிடம் வழங்கினார். திருச்சி சலேசிய முன்னாள் மாணவர் சங்கம் பொறுப்பாளர் அருட்தந்தை ஹென்றி டோமினிக் வாழ்த்தி பேசினார்.
கலை நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை தமிழ்த்துறை பேராசிரியரும், துணைமுதல்வருமான சு.தெய்வரத்தினா செய்திருந்தார்.,
தொன் போஸ்கோ முன்னாள் மாணவர் சங்கம் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக பாலமுருகன், ரொசாரிபாத்திமா, எட்வின், மகாராஜா,
ஜெரொமி தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி துறை பேராசிரியர்கள் .கீர்த்தனா, புதியவன், ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் ரமா, அற்புதராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்,