நடிகை புகார்: மலையாள இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு

 நடிகை புகார்: மலையாள இயக்குனர் மீது போலீசார் வழக்கு பதிவு

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சனல் குமார் சசிதரன். இவர் ‘ஒழிவுதெவசத்தே களி’, ‘செக்ஸி துர்கா’ போன்ற சுயாதீன படங்களை இயக்கி பிரபலமாnaat

இந்நிலையில், இயக்குனர் சனல் குமார் சசிதரன் மீது மலையாள நடிகை ஒருவர் கொச்சி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் தன்னை தொடர்ந்து சனல் குமார் துன்புறுத்துவதாக நடிகை அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இந்த புகாரையடுத்து, கொச்சி எலமக்கரை போலீசார் சனல் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை இயக்குனரே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, நடிகையின் பெயரில் வேறு யாரோ தனக்கு எதிராக புகார் கொடுத்ததாக கூறி இருக்கிறார்.

இவ்வாறு இவர் மீது புகார் வருவது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு இதே நடிகை இவர் மீது புகார் அளித்திருந்தார். அதில், இயக்குனர் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *