கோவில்பட்டியில் இறைச்சி கடைக்காரர் வீட்டில் நகை, பணம் சுருட்டிய கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கைது
கோவில்பட்டி முகம்மது சாலியபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சையது சுலைமான். இறைச்சி கடை உரிமையாளரான இவர் வசிக்கும் வீட்டின் எதிர்புறத்தில் சமீபத்தில் புதிதாக வீட்டு கட்டி இருக்கிறார்.
அந்த வீட்டுக்கு முழுமையாக மாறாமல் இரவில் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் அங்கு போய் தூங்குவது வழக்கம். அந்த சமயம் பழைய வீட்டு பூட்டி இருக்கும்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடந்த 8-ந்தேதி இரவு அந்த வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 50 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.29 லட்சத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்,
மறுநாள் இந்த கொள்ளை சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த முகம்மது சையது சுலைமான் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
துணை சூப்பிரண்டு ஜெகநாதன் மேற்பார்வையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்ப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கபட்டது,
தனிப்படை போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொடைரோடு சுங்கசாவடி அருகே காத்திருந்தனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த 2 கார்களை தனிப்படை போலீசார் மடக்கி சோதனை செய்தபோது 2 கார்களும் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றன,
சுதாரித்துக்கொண்ட ஒரு காரை துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து மடக்கினர். மற்றொரு காரில் வந்தவர்கள் எதிர்சாலையில் திரும்பி அங்கிருந்து தப்ப முயன்றபோது, சாலையின் தடுப்பில் இடித்து எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
அந்த காரை ஓட்டி வந்த சுபாஷ் சந்திரபோஸை போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே அவர், தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுபாஷ் சந்திரபோஸை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மொத்தத்தில் 2 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்டவர்களை அம்மையநாயக்கனூர் போலீஸ் கொண்டு சென்றனர், விசாரணையில் , கோவில்பட்டி இறைச்சி கடை உரிமையாளர் வீட்டில், கைவரிசை காட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை கோவில்பட்டி கொண்டு அழைத்து வந்து மேலும் விசாரணி நடத்த போலீசார் திட்ட்டமிட்டுள்ளன்ர்.
.கொடைரோடு சுங்கச்சாவடியில் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.