தமிழகத்தின் மாநில பட்டாம் பூச்சி “தமிழ் மறவன்”
விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் பட்டாம் பூச்சியை பார்த்து தங்களுடைய பாஷையிலே ,” பாப்பாத்தி பறக்குது ” என்பார்கள் இது நன்மையும் தீமையும் செய்ய கூடிய வகைகள் உள்ளன
கிட்டத்தட்ட 20000 க்கு மேற்பட்ட பட்டாம் பூச்சி வகைகள் உள்ளன. இவை லெபிடோப் டெரா ( LEPIDOPTERA ) வரிசையில் வரும் பூச்சிகள் இதில் அந்துபூச்சிகளும் அடங்கும்.
.உலகிலேயே எறக்குறைய 119மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய உயிரினம் தான் இந்த பட்டாம்பூச்சி..
பூச்சியினஙகளில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் இயற்கையின் அழகான படைப்பு பட்டாம் பூச்சி.
பட்டாம் பூச்சியின் வாழ்க்கை
முட்டை – லார்வா- பியூபா – முதிர்ந்த பட்டாம்பூச்சி என 3 முதல் 4 வாரங்களில் வாழ்ந்து முடிந்து விடும்.
உடலைமைப்பு 3 பகுதியாக பிரிக்க பட்டுள்ளன.
1) தலைபகுதி ( மேல் உடல்பகுதி)
2) மார்பு ( நடுத்தர உடல்பகுதி): வயிற்று பகுதி
3) வால்முனை : கடைசி உடல் பகுதி
மேலும் தலைபகுதியில் இரண்டு ஆண்டெனாக்களும் ஓரு எக்ஸோ ஸ்கெல்டினும் இணைக்கபட்டுள்ளன.
பட்டாம் பூச்சியின் கால்களால் தான் சுவைகளை அறிந்து கொள்கின்றன. பெண்பூச்சி முட்டை இடுவதற்கான சூழ்நிலையில் உள்ள இடங்களை தன்னுடைய தலையில்உள்ள ஸ்பரிச உறுப்புகளும் உணர்கொம்புகளும் வாசனை முகர்ந்து தேடி கண்டுபிடிக்க படுகிறது..
பொதுவாக பட்டாம் பூச்சி கறிவேப்பிலை, எலுமிச்சை வகை செடிகள், சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற செடிகளில் அதிகமாக காணப்படும்.
உலகின்மிகப்பெரிய பட்டாம் பூச்சி பப்பு வா நீயூகினியா நாட்டிலே உள்ள ” குயின் அலொக்ஸாண்டிரியா..அதுபோல இந்தியாவின் மிகப்பெரிய பட்டாம் பூச்சி ” சதர்ன் போட்விப். “இந்தியாவின் மிக சிறிய பட்டாம்பூச்சியாக” ஓரிண்டல் கிராஸ் ஜவல்” உள்ளது.இவை இரண்டுமே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகின்றன.
தமிழகத்தின் மாநில பட்டாம் பூச்சியாக ” தமிழ் மறவன்” என்ற மலைச்சிறகன் உள்ளது. ஜூலை 2019 இல் . தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன
.இந்நிலையில் பட்டாம்பூச்சிகளுக்கு தமிழக அரசின் சின்னம் அந்தஸ்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு பட்டாம்பூச்சிகளை 10 பேர் குழு ஆய்வு செய்தது. இந்த குழு இறுதியில் தமிழ் மறவன் மற்றும் தமிழ் லேஸ்விங் ஆகிய பட்டாம்பூச்சிகளை தேர்வு செய்தது. இறுதியில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சிக்கு சினனம் அந்தஸ்து வழங்க வனத்துறை தேர்வு செய்தது
மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசிக்கும் 32 பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்று தான் ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி .கூட்டமாக வசிக்கும் இநத் பட்டாம்பூச்சி ஒரு சில இடங்களில் மட்டுமே வசித்து வருகிறது. கூட்டமாகத் தான் வேறு இடங்களுக்குச் செல்லும்.
இந்த பட்டாம்பூச்சி அடர் பழுப்பு நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை கொண்டவை ஆகும். இந்த தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு அர்த்தம் போர் வீரன் என்பதாகும். இதனுடைய ஆங்கில பெயர் TAMIL YEOMAN
பட்டாம் பூச்சி நம்முடைய வீட்டுக்கு வந்து போனால் அதிர்ஷடம் என்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.
இது நமக்கு நல்ல செய்தியை கொண்டுவருவதாக ஓரு நம்பிக்கை நம்முடைய விவசாயிகளிடத்தில் உள்ளது.
அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.