• February 7, 2025

பெண்கள் கபடி போட்டியில் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு முதல் பரிசு

 பெண்கள் கபடி போட்டியில் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு முதல் பரிசு

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அளவிலான பெண்கள் கபடி போட்டி, கோவில்பட்டி முத்துநகரில் நடைபெற்றது, இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொண்டன.

இறுதி போட்டியை அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும்  நகர்மன்ற உறுப்பினருமான கவியரசன் தொடங்கி வைத்து, இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கினார்.

போட்ட்டியில் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் பரிசு பெற்றது, , 2ம் இடம் தூத்துக்குடி தஸ்நேவிஸ் அணிக்கு கிடைத்தது., 3ம் இடம் ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி , 4ம் இடம் கரிதா சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகிய அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் ஒய்வு பெற்ற வங்கி மேலாளர் தங்கவேல்,  கரிதா பள்ளி தாளாளர் காசிராஜன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்கத்தின் தலைவர் செல்வத்தேவர், பேராசிரியர் முனைவர் சம்பத்குமார், மதன் ராஜா,  வசந்த், அகாடமி ஆலோசகர்கள் பரதன் , ஆசிரியர் பரமசிவன் ,மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் சுரேஷ் ,ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனர்  செந்தூர் கனி, செயலாளர் முனைவர் கரிகாலன், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சதிஷ், ஜேசா, வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் ஜேக் முகமது, கருப்பசாமி அதிர்ஷ்ட லட்சுமி, பிரேமா,வேல் , கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *