தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க எம்.பி.க்கள் முயற்சி செய்வார்களா?

 தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க எம்.பி.க்கள் முயற்சி செய்வார்களா?

தென் மாவட்டங்களில் நாகர்கோவில் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன, நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை இரட்டை ரெயில் பாதைக்காக வழித்தடங்கள் உள்ளன.

எனவே இருப்புப்பாதை வசதிகளை கருத்தில் கொண்டு புதிய ரெயில்களை இயக்காவிட்பாலும், கடந்த 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட  ரெயில்களையாவது மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தென் மாவட்டங்கனை பொறுத்தவரை தூத்துக்குடி – கோயம்புத்தூர் தினசரி இரவு நேர ரெயில், தூத்துக்குடி சென்னை பகல் நேர தினசரி ரெயில், மயிலாடுதுறை தினசரி ரெயில் உள்ளிட்ட ரெயில்கள் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.

இணைப்பு ரெயில்கள் அடிப்படையில் இயக்கப்பட்ட இந்த ரெயில்கள் இப்போது ஏத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த ரெயில்களில் நல்ல கூட்டம் காணப்பட்ட நிலையில், இவற்றை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நெல்லை- கத்ரா வாராந்திர ரெயில் மட்டுமின்றி, நாகர்கோவில் மங்களூர் ஏரநாடு தினசரி ரெயில் ரத்து செய்யப்பட்டன. கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் ரெயிலை தற்போது கன்னியாகுமரி – புனே என மாற்றி இயக்கி வருகின்றனர்.  மதுரை – டேராடுன் & சண்டிகர் இடையே வாரம் இருமுறை ஓடிய ரெயில், தற்போது மதுரை -சண்டிகர் இடையே மட்டும் வாரம் இருமுறை இயக்கப்பட்டு வருகிறது.

ரெயில்\வே கால அட்டவணையில் அறிவித்து விட்டு, சிறப்பு ரெயிலாக இயக்கிய தாம்பரம்- செங்கோட்டை அந்தியோதயா ரெயிலையும் ரத்து செய்துவிட்டனர். இதனால் தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பாதிக்கபப்ட்டுள்ளனர்.

செங்கோட்டை- கொல்லம் இடையே இயக்கப்பட்ட ஒரே ஒரு பயணிகள் ரெயிலையும் ரத்து செய்துவிட்டனர். நெல்லை- கொல்லம் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலக்கட்டத்தில், தினசரி 4 ரெயில்கள் இயங்கி வந்தன தற்போது ஒரு ரெயிலுக்கு கூட வழி இல்லை.

பல ரெயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் முக்கிய நகரங்களுக்கு செல்ல திண்டாடுகின்றனர். எனவே இரட்டை ரெயில் பாதை வசதிகளை பயன்படுத்தி மீண்டும் நிறுத்தப் பட்ட ரெயில்களை இயக்க  முன்வர வேண்டும். தூத்துகுடி, நெல்லை, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், மதுரை தொகுதி எம்.பி.க்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *