• May 19, 2024

தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள்-சின்னங்கள்

 தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள்-சின்னங்கள்

திமுக, அதிமுக,தமாகா. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன.

இதில் அரசியல் கட்சியினரிடம் இருந்து கைநழுவி போன சின்னங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர்.
கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டனர். தற்போது அந்த சின்னம் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாம் தமிழர் கட்சியினர் கோர்ட்டு வரை சென்றும், கரும்பு விவசாயி சின்னம் கைநழுவி போய்விட்டது. தற்போது அந்த சின்னம் சுயேச்சை சின்னமாக உள்ளது. இதனால் கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சை வேட்பாளர் அருணாதேவி பெற்று உள்ளார்.
இதேபோன்று கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது அந்த சின்னத்தை நாம் இந்தியர் கட்சி என்.பி.ராஜா பெற்று இருக்கிறார்.

கடந்த தேர்தலில் அ.ம.மு.க.வினர் பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டனர். தற்போது அ.ம.மு.க.வினர் போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் பிரஷர் குக்கர் சுயேச்சை சின்னமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் பிரஷர் குக்கர் சின்னத்தை மக்கள் நல்வாழ்வு கட்சி கலீர் முருகப்பாவேந்தனுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இந்த தொகுதியில் களம் காணும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம்

1. கனிமொழி (தி.மு.க.) உதயசூரியன்

2. சிவசாமி வேலுமணி (அ.தி.மு.க) இரட்டை இலை

3. மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) யானை

4. கலீர் முருகப் பாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி) பிரஷர் குக்கர்

5. டாக்டர் காட்ப்ரே நோபல் (அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) ஆட்டோ ரிக்க்ஷா

6. பெருமாள் குமார் (புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி) காலணி

7. என்.பி.ராஜா (நாம் இந்தியர்) டார்ச் லைட்

8. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர் கட்சி) ஒலிவாங்கி (மைக்)

9. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமிழ் மாநில காங்கிரஸ்) மிதிவண்டி

10. அருணா தேவி (சுயே) கரும்பு விவசாயி

11. இசக்கிமுத்து (சுயே) பலாப்பழம்

12. கண்ணன்(சுயே) உழவுகருவி

13. கிருஷ்ணன் (சுயே) குளிர்சாதனப்பெட்டி

14. சாமுவேல் (சுயே) மோதிரம்

15. சித்திரை ஜெகன்  (சுயே) தென்னந்தோப்பு

16. சிவனேஸ்வரன் (சுயே) பலூன்

17. சுடலைமுத்து (சுயே) வாயு சிலிண்டர்

18. செந்தில்குமார் (சுயே) கைப்பெட்டி

19. டேவிட் ஜெபசீலன் (சுயே) பென்டிரைவ்

20. பிரசன்னகுமார் (சுயே) ட்ரக்

21. பொன்குமரன் (சுயே) தொலைக்காட்சிப்பெட்டி

22. பொன்ராஜ் (சுயே) கேரம்பலகை

23. ராதாகிருஷ்ணன் (சுயே) தீப்பெட்டி

24. ஜெயக்குமார் (சுயே) பானை

25. ஜேம்ஸ் (சுயே) மடிக்கணினி

26. காந்திமள்ளர் (சுயே) மிக்ஸி

27. சண்முகசுந்தரம் (சுயே) வைரம்

28. செல்வகுமார் (சுயே) கணினி 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *