அதிமுக கூட்டணியில் தேமுதிக; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது
![அதிமுக கூட்டணியில் தேமுதிக; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது](https://tn96news.com/wp-content/uploads/2024/03/IMG-20240301-WA0483-850x560.jpg)
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டி திமுக மற்றும் பாஜக பாஜக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக தனி கூட்டணி அமைக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிக சேருகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பான தொடர்பான பேச்சு வார்த்தை இன்று தொடங்கியது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி , தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் நேரில் சந்தித்தனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/03/IMG_20240301_184944_110-1024x563.webp)
விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள்.
பேச்சுவார்த்தையில் பிரேமலதாவுடன் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.
முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. அடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி உடன் தேமுதிக கோரிக்கைகள் பற்றி பேச்சு நடத்திய பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)