கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா; பக்தர்கள் குவிந்தனர்

கோவில்பட்டி கடலைக்கார தெருவில் உள்ள நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு பூஜைகள் தொடங்கின.
சங்கல்பம் பூஜை , விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடந்தது.
பின்னர் 8 மணிக்கு மேல் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடந்தது, கும்பத்துக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது, பின்னர் தீப ஆராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை தூத்துக்குடி சிவா ஸ்ரீ செல்வம் பட்டர் நடத்தினார்.

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் ,கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பகல் 12 மணி அளவில் கோவில் அருகில் ஈ.வே.அ.வள்ளிமுத்து நாடார் இளைஞர் அணியினரால் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு 7 மணி அளவில் பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 8-வது நாள் மண்டகபடிதாரரான நாடார் மொத்த வியாபாரிகள் மண்டகபடிதாரர்கள் சார்பில அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் காளியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெறும்.
