தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.71 கோடியில்  திட்டப்பணிகள்; அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார் .

 தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.71 கோடியில்  திட்டப்பணிகள்; அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார் .

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ரூ.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க  விழா புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில், 10.24 கோடி மதிப்பீட்டில் ஜெயராஜ் சாலையில் பல் அடுக்கு வாகன நிறுத்தம், 7.04 கோடி மதிப்பீட்டில் டி.எம்.பி காலனிப்பகுதியில் சலவை கூடம், 23.29 கோடி மதிப்பீட்டில் திறவிடப் பகுதிகளில் 8 பூங்காக்கள் கதிர்வேல் நகர் பகுதியில் வள மீட்பு மையம், 1.40 கோடி மதிப்பீட்டில் சிவந்தாகுளம் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சென்சுரி பூங்கா, 2 கோடி மதிப்பீட்டில் 5 இடங்களில் உள்ள பழமை வாய்ந்த கட்டங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி (தெற்கு புதுத் தெரு), 11.77 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம்9 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கான சீர்மிகு பணிமனை, 0.22 கோடி மதிப்பீட்டில் மடத்தூர் பகுதியில் பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்ட முடிக்கப்பட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி  வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி.,, பாலாஜி சரவணன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ.  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் அதிகாரியுடன் அமைச்சர் கே என் நேரு ஆலோசனை நடத்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *