சாலையின் இருபுறமும் நடும் பணிக்காக 2,300 மரக்கன்றுகள் கோவில்பட்டி வந்தன
![சாலையின் இருபுறமும் நடும் பணிக்காக 2,300 மரக்கன்றுகள் கோவில்பட்டி வந்தன](https://tn96news.com/wp-content/uploads/2023/05/Paper-News-1_page-0001-850x560.jpg)
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக மரங்களை நடவு செய்து பசுமையாக்கவும் வாகன ஓட்டிகள் மரநிழலில் இளைப்பாறும் வகையில் அதிகமான மரக்கன்றுகள் நடவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நெடுஞ்சாலைத ;துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அரசின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/05/7beb8dc8-9350-4b20-93f4-aa40f47a5e82-1-1024x1024.jpg)
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் மரங்கள் நடவேண்டும் என்றும் நடவு செய்யக்கூடிய மரங்கள் குறைந்தது 6 அடி முதல் 8 அடி வரை இருக்க வேண்டும் என்பது குறித்து கோட்டப்பொறியாளர்.ஆறுமுகநயினார் அதிகாரிகளுடன் ஆலோசணை செய்து, அதற்கு ஏற்றாற்போல் மரக்கன்றுகளை பல்வேறு இடங்களில் இருந்து பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
மோத்தம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவு செய்யும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சுமார் 2,300 மரக்கன்றுகள் கோவில்பட்டிக்கு வந்துள்ளன. இந்த மரக்கன்றுகளை கோட்டப்பொறியாளர் ஆறுமுகநயினார் ஆய்வு செய்தார். தொடர்ந்து 10 ஆயிரம் மரக்கன்றுகளும் வந்த பின்னர் இதனை நடவு செய்யும் பணி தொடங்கும் என்றும், மாநில நெடுஞ்சாலைகளில் ரோட்டின் இருபுறங்களில் இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)